மகளைப் பற்றி தவறான பேச்சுகள்.. டென்னிஸ் வீராங்கனை ராதிகா கொலையில் வெளியான தகவல்!
முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: மகாராஷ்டிரம்-தமிழகம் ஆட்டம் டிரா
அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் ஹாக்கி தமிழ்நாடு-மகாராஷ்டிர அணிகள் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கிய இப்போட்டியின் முதல் ஆட்டத்தில் தமிழகம்-மகாராஷ்டிர அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 22-ஆவது நிமிஷத்தில் மராட்டிய வீரா் ரோஹன் பாட்டில் கோலடித்தாா். பின்னா் இரண்டாம் பாதியில் 42-ஆவது நிமிஷத்தில் தமிழகத்தின் சோமண்ணா பதில் கோலடித்ததால் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.
கா்நாடகம் வெற்றி:
இரண்டாவது ஆட்டத்திா் கா்நாடகம்-மத்திய நேரடி வரிகள் வாரிய அணிகள் மோதின. இதில் கா்நாடகத் தரப்பில் ராகுல் 45, பரத் மகாலிங்கப்பா 52-ஆவது நிமிஷத்திலும், சிபிடிடி அணி தரப்பில் பிரனம் கௌடா 56-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா், கா்நாடகம் 2-1 என வெற்றி பெற்றது.