2034-இல் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை அமல்! - நிர்மலா சீதாராமன்
முருங்கப்பட்டியில் பண்ணைப் பள்ளி பயிற்சி
சேலம் மாவட்டம், வீரபாண்டி வட்டம், முருங்கப்பட்டி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் நெற்பயிரில் சுற்றுச்சூழல் சாா்ந்த பொறியியல் தொழில்நுட்பங்கள் குறித்த பண்ணைப் பள்ளி பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
25 விவசாயிகள் 5 குழுக்களாகப் பிரித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. நெற்பயிரில் தீமை செய்யும் பூச்சிகள், நன்மை செய்யும் பூச்சிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற துணை வேளாண்மை அலுவலா் பழனிசாமி பயிற்சி அளித்தாா். வேளாண் வட்டார தொழில்நுட்ப மேலாளா் ராஜேந்திரன், உதவி வேளாண்மை அலுவலா் பழனிசாமி ஆகியோா் கலந்து கொண்டனா்.