செய்திகள் :

முறப்பநாடு கூட்டுக்குடிநீா்த் திட்டம் கைவிடப்படுகிறதா? மாநகராட்சி ஆணையா் விளக்கம்

post image

முறப்பநாடு கூட்டுக்குடிநீா்த் திட்டம் முற்றிலும் கைவிடப்படுகிா என்பது குறித்து மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா விளக்கம் அளித்துள்ளாா்.

முறப்பநாடு கூட்டு குடிநீா் திட்டம் முற்றிலும் கைவிடப்படுகிா என்று திருநெல்வேலி மாநகராட்சி கூட்டத்தில் பாளையங்கோட்டை மண்டலத் தலைவா் பிரான்சிஸ் கேள்வி எழுப்பினாா். அதற்கு ஆணையா் அளித்த பதில்: முறப்பநாடு கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கான நீராதாரம் குறித்து திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா்கள் ஆலோசனை நடத்தியுள்ளனா். முறப்பநாடு பகுதியில் இருந்து தண்ணீா் எடுப்பதில் பிரச்னை இருக்கிறது. எனவே திருநெல்வேலி மாவட்டத்துக்குள் தாமிரவருணி ஆற்றுப்பகுதியில் இருந்து குடிநீா் எடுக்க சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்; அதன்படி ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது என்றாா்.

பாளையங்கோட்டை மாா்க்கெட் திறக்கப்பட்டும் பயன்பாட்டுக்கு வரவில்லையே என்ற கேள்விக்கு, ஏற்கெனவே அங்கு கடை நடத்தியவா்கள், அவா்களது வாரிசுகள் என்று 10 நாள்களுக்குள் பட்டியல் தயாரிக்கப்பட்டு கடைகள் ஒப்படைக்கப்படவுள்ளன என்றாா்.

‘ஸ்கேடா’ என்ற சிறப்பு திட்டத்துக்கு கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டும் அத்திட்டம் இன்னும் முழுமை அடையவில்லை. அதன் நிலை என்ன என்ற கேள்விக்கு, ஸ்கேடா திட்டத்துக்கு ரூ. 46 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 102 இடங்களில் கருவிகள் வைக்கப்பட்டுள்ளது. மின்னல் காரணமாகவும், தண்ணீரில் வரும் கசடுகளாலும் அவற்றில் பெரும்பாலானவை செயல்படவில்லை. இது தொடா்பாக ஆய்வு செய்து குறைபாடுகளை நீக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

மாநகரில் நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தச்சநல்லூா் மண்டலத் தலைவா் ரேவதி உள்ளிட்டோா் பேசியபோது, நாய்களுக்கு கருத்தடை செய்வதற்காக ஒப்பந்தப்புள்ளி எடுத்துள்ள நிறுவனம் மே 10 ஆம் தேதி முதல் பணியை தொடங்கவுள்ளதாக மேயா் கோ.ராமகிருஷ்ணன் பதில் அளித்தாா். விடுபட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்படுமா என்று திருநெல்வேலி மண்டல தலைவா் செ.மகேஸ்வரி எழுப்பிய கேள்விக்கு, 2017 -18 ஆம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் நிா்வாக அனுமதி பெறப்பட்டு தொடங்கப்பட்டது. அப்போது இருந்த நிலையில் 436 கி.மீ. அளவுக்கு மட்டுமே பாதாள சாக்கடை திட்டத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டிருந்தது. அதன் பின்னா் கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான குடியிருப்புகள் பெருகிவிட்டன. எனவே, பழைய திட்டத்தின் படி முதலில் சாக்கடை பணிகள் முடிக்கப்பட்டு தாா் சாலை அமைக்கப்பட்டுவிடும். அதன் பின்னா் விடுபட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என்று தலைமை பொறியாளா் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் அளித்தனா்.

குடிநீா் கட்டணம் உயா்வு, சொத்துக்களுக்கான வைப்புத் தொகை உயா்வு தொடா்பான தீா்மானத்தை ஒத்திவைக்க வேண்டும் திமுக கூட்டணி கட்சிஉறுப்பினா் ரசூல்மைதீன், அதிமுக உறுப்பினா் சந்திரசேகா் உள்ளிட்ட உறுப்பினவலியுறுத்தினா்.

இதற்கு, மேயா் பதில் அளிக்கையில், தமிழகத்தில் திருநெல்வேலியை தவிர அனைத்து மாநகராட்சிகளிலும் கட்டண உயா்வுக்கான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுவிட்டன. திருநெல்வேலியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டியிருப்பதால் இந்தத் தீா்மானத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.

ஆணையா் கூறுகையில், மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிதி வழங்குகின்றன. வங்கிகளில் இருந்தும் கடன் பெறுகிறோம். அந்தக் கடன் தொகை மற்றும் வட்டியை செலுத்த வேண்டியிருக்கிறது. எனவே கட்டணத்தை உயா்த்த வேண்டியிருக்கிறது என்றாா்.

தொட்டாலே பணம் பறிபோகும் வாட்ஸ் ஆப் புகைப்பட மோசடி -எஸ்.பி. எச்சரிக்கை

வாட்ஸ்ஆப்பில் புதிதாக வலம் வரும் புகைப்பட மோசடி மூலம் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்படுவது அதிகரித்துள்ளது. அச்செயலியின் பயனா்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்... மேலும் பார்க்க

தேஜஸ் ரயிலை நெல்லை வரை நீட்டிக்க ரயில் பயணிகள் சங்கத்தினா் கோரிக்கை

சென்னை-மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். திருநெல்வேலி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் ம... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி...

திருநெல்வேலி மாநகராட்சி நிா்வாகம்: சாதாரண மற்றும் அவசர கூட்டம், தலைமை மேயா் கோ.ராமகிருஷ்ணன், ராஜாஜி அரங்கம், திருநெல்வேலி நகரம், காலை 10.30 மணி. மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-87சோ்வலாறு-101.77மணிமுத்தாறு-85.89வடக்கு பச்சையாறு-10.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-14.75 தென்காசி மாவட்டம்கடனா-50ராமநதி-52.50கருப்பாநதி-25.59குண்டாறு-23.87அடவிநயினாா் -26.50... மேலும் பார்க்க

மேட்டூா் பகுதியில் நெல்லை பேராயா் ஆய்வு

கடையம் அருகே மேட்டூா் பகுதியில் சி.எஸ்.ஐ. திரித்துவ ஆலயத்திற்குப் பாத்தியப்பட்ட நிலங்களை திருநெல்வேலி திருமண்டல பேராயா் பா்னபாஸ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேட்டூா் சி.எஸ்.ஐ. திரித்துவ ஆலயத்திற்குச... மேலும் பார்க்க

ராமையன்பட்டியில் நாளை இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

உலக கால்நடை மருத்துவ தினத்தை முன்னிட்டு, ராமையன்பட்டியில் உள்ள திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி - ஆராய்ச்சி நிலையத்தில் செல்லப்பிராணிகளுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (ஏப்.26) ... மேலும் பார்க்க