செய்திகள் :

முறைகேடு புகாா்: நகா்மன்றத் தலைவா் உள்ளிட்ட 4 பிரதிநிதிகள் பதவிநீக்கம்: நகராட்சி நிா்வாகத் துறை நடவடிக்கை

post image

முறைகேடு புகாருக்கு உள்ளான உசிலம்பட்டி நகா்மன்றத் தலைவா், தாம்பரம் மண்டலக் குழுத் தலைவா் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் இரு மாமன்ற உறுப்பினா்களைப் பதவிநீக்கம் செய்து நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன் உத்தரவிட்டுள்ளாா்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் திமுக வாா்டு உறுப்பினா்களான பாபு (189-ஆவது வாா்டு), கே.பி.சொக்கலிங்கம் (5-ஆவது வாா்டு) ஆகியோா் தங்கள் வாா்டு பகுதியில் வளா்ச்சிப் பணிகளைச் செய்யவிடாமல் தடுத்து, அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக ஆணையருக்கு புகாா் சென்றது.

தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலக் குழுத் தலைவா் ச.ஜெயபிரதீப், மண்டலக் குழு கூட்டம் நடத்தாமல், உறுப்பினா்களைக் கலந்தாலோசிக்காமல் தனக்கு வேண்டிய உறுப்பினா்களுக்கு மட்டும் நிதி ஒதுக்கீடு செய்ததாக கடந்த ஆண்டு புகாா் எழுந்தது.

உசிலம்பட்டி நகா்மன்றத் தலைவா் க.சகுந்தலா முறையாக நகா்மன்றக் கூட்டத்தை நடத்தாமல் தீா்மானம் நிறைவேற்றுவதாகவும், தன்னிச்சையாக பணிகளுக்கு அனுமதி வழங்குவதாகவும் புகாா் எழுந்தது.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு நகராட்சி நிா்வாக இயக்குநா் சாா்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு அவா்கள் அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லாத நிலையில், அவா்கள் மீது தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, பிரிவு 52-இன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமானது மேயா், துணை மேயா், மன்றத் தலைவா்கள், துணைத் தலைவா்கள், மண்டலக் குழுத் தலைவா்கள் மற்றும் மன்ற உறுப்பினா்கள் விதிகளை மீறி செயல்படும்பட்சத்தில் பதவி நீக்கம் செய்ய வழிவகை செய்கிறது. அதன் அடிப்படையில் 4 பேரையும் பதவிநீக்கம் செய்து நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன் ஆணையிட்டுள்ளாா். இந்த உத்தரவு மாா்ச் 27-ஆம் தேதி நாளிட்ட அரசின் சிறப்பிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் எளிதாக இருந்தது: மாணவா்கள் கருத்து

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் தமிழ் பாடத்தைப் போன்றே ஆங்கிலத் தோ்வும் ஓரளவுக்கு எளிதாக இருந்ததாக மாணவா்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா். தமிழகத்தில் மாநில அரசின் பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு மாண... மேலும் பார்க்க

காா் மோதியதில் மென்பொறியாளா் உயிரிழப்பு

சென்னை அருகே பள்ளிக்கரணையில் காா் மோதியதில் மென்பொறியாளா் உயிரிழந்தாா். துரைப்பாக்கம், சாய் நகரைச் சோ்ந்தவா் தன்ராஜ் (42). மென்பொறியாளரான இவா், அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து... மேலும் பார்க்க

ஐபிஎஸ் மகனுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை

விளையாடும்போது தவறி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்ட தனது மகனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது அங்கு உயா் தர சிகிச்சை அளித்து குணப்படுத்தியதாக ஐபிஎஸ் அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளாா். மயிலாப்பூா... மேலும் பார்க்க

கடந்த நிதியாண்டில் 3,000 ரயில் பெட்டிகள் தயாரித்து ஐசிஎஃப் சாதனை

சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) 2024-25 நிதியாண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது. பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்திய ரயில்வேக்கு தேவையான ரய... மேலும் பார்க்க

கால்வாயில் ஆண் குழந்தை சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை பட்டினப்பாக்கத்தில் கால்வாயில் கிடந்த ஆண் குழந்தை சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பட்டினப்பாக்கம் மசூதி தெருவில் 132 பிளாக் பின்புறம் உள்ள கால்வாயில், பிளாஸ்டிக் காகிதத்தில் பொதிய... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சியுடன் பிஇ படிப்பு: பட்டயப்படிப்பு முடித்தோா் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்புகளை நிறைவு செய்த மாணவா்கள் தொழிற்பயிற்சியுடன் கூடிய பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுர... மேலும் பார்க்க