செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடித்து வைப்பு!
முல்லைப் பெரியாறு அணை பலவீனம்: கேரள அரசு பிரமாணப் பத்திரம்
முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு விவகாரம் தொடர்பான வழக்கில், அணை பலவீனமாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக அரசின் மனுவுக்கு, உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், தற்போதைய முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலவீனமாகவும், மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது. முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதே அனைத்துக்கும் தீர்வாக இருக்கும், எனவே, புதிய அணை கட்டுவது தொடர்பான அனைத்து சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும், அதற்கான செலவுகளை கேரள அரசே ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீரை சேமித்து வைக்க தமிழக அரசுக்கு உரிமை இல்லை.
மேலும், முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளுக்காக மரங்களை வெட்ட அனுமதிக்க கோரிய தமிழ்நாடு அரசின் விண்ணப்பம் காலாவதியாகிவிட்டது. மத்திய வனத்துறையின் பரிவேஷ் இணையதளத்தில் தமிழ்நாடு அரசு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கேரள அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
142 அடி வரை நீரை தேக்கி வைக்கும் கோரிக்கை ஏற்கனவே நிறைவேறியுள்ளதால், மீண்டும் அதை வலியுறுத்த முடியாது என்றும் அந்த மனுவில் கேரளம் தெரிவித்துள்ளது.