அபிஷேக், திலக் வர்மா அதிரடி: பாகிஸ்தானை மீண்டும் பந்தாடியது இந்தியா!
முஸ்லிம்களுக்கு ஆதரவாக முதலில் வந்து நிற்கும் கட்சி திமுக! -முதல்வர் மு.க.ஸ்டாலின்
முஸ்லிம்களுக்கு ஆதரவாக முதலில் வந்து நிற்கும் கட்சி திமுகதான் என்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற நபிகள் நாயகத்தின் 1500-ஆவது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பங்கேற்று முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசியதாவது: “சிஏஏ விவகாரத்தில், ‘தோழமைப் பண்பின் உள்ளார்ந்த அர்த்தத்துடன்’ சிஏஎ-வை எதிர்த்து போராடியது திமுகதான். சிஏஏ-வை எதிர்த்து போராடிய மக்களை காவல்துறையை ஏவி லத்தி சார்ஜ் செய்த ஆட்சி எது என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
முத்தலாக் விவகாரத்தில் அஇஅதிமுகவின் இரட்டை நிலைப்பாட்டை ஒவ்வொருத்தரும் அறிவர். அதிமுகவின் துரோகத்தால் அக்கட்சியிலிருந்த அன்வர் ராஜா போன்ற தலைவர்கள் அங்கிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
வக்ஃப் விவகாரத்திலும், வக்ஃப் சட்ட திருத்தத்தில் அதிமுக கபடநாடகமாடியது. திமுகவும் இன்னும் பிறரும் சட்டப்போராட்டம் நடத்தியதாலேயே வக்ஃப் திருத்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திலிருந்து இடைக்கால தடை பெற முடிந்தது.
நபிகள் நாயகத்தைப் பற்றி தமிழ்நாடு பள்ளி பாடநூல்களில் ஏற்கெனவே சேர்த்துவிட்டோம். முஸ்லிம்களுக்கு ஆதரவாக முதலில் வந்து நிற்கும் கட்சி திமுகதான்” என்றார்.