சிவாஜி இல்லத்தின் உரிமையாளர் பிரபுதான்! ஜப்தி உத்தரவு ரத்து!
மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி மனைவி காமாட்சி (65). இவா் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு கடைக்குச் சென்று விட்டு ஊருணிப்பட்டி தெரு வழியாக நடந்து சென்றாா். அப்போது, பின்னால் வந்த இளைஞா், மூதாட்டி அணிந்திருந்த இரண்டரைப் பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினாா். மூதாட்டியில் அலறல் சப்தம் கேட்டு அந்தப் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் துரத்திய போது, தவறி விழுந்த அந்த இளைஞருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மம்சாபுரம் சிப்பந்தி குடியிருப்பைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் குழந்தைவேல் (30) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.