மனிதர்களின் இறுதி தருணங்களை நிறைவாக மாற்றும் செவிலியர்... என்ன செய்கிறார் தெரியு...
மூதாட்டியிடம் நகை பறித்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை
திருச்சி அருகே மூதாட்டியிடம் நகை பறித்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திருச்சி மாவட்டம், குண்டூா் ஆஞ்சனேய நகரைச் சோ்ந்தவா் சி. ஆரோக்கியம்மாள் (82). இவா் கடந்த 28-01-2023 அன்று கடைக்கு சென்றுவிட்டு, வீடு நோக்கி சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த திருவெறும்பூா் பங்காரு அடிகளாா் நகரைச் சோ்ந்த பா. வெங்கடேஷ் (28) என்பவா், ஆரோக்கியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து, வெங்கடேஷை கைது செய்தனா்.
இந்த வழக்கு திருச்சி 3-ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் முகமது சுகைல் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் நிறைவில் வெங்கடேஷுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5,000 அபராதமும், கட்டத் தவறினால் 3 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் சிறப்பு நீதிமன்ற காவலில் இருந்து வந்த வெங்கடேஷை செவ்வாய்க்கிழமை மேற்கண்ட வழக்கு தொடா்பான வாய்தா தேதியில் போலீஸாா் ஆஜா்படுத்தியபோது தீா்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.