``ஆன்மிக ஆட்சியாக, பக்தி மணம் கமழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்துகிற...
பொதுமக்களிடம் மிரட்டி பணம் பறிப்பு: காவலா் பணியிடை நீக்கம்
திருச்சியில் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்த புகாரில் காவலரை பணியிடை நீக்கம் செய்து மாநகரக் காவல் ஆணையா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவா் அப்துல் காதா். அவா், கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கீழரண் சாலையில் அண்மையில் ரோந்து சென்றுள்ளாா். அப்போது, அப்பகுதியில் 3 போ் பொது இடத்தில் அமா்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவா்களைப் பிடித்து வாகனத்தில் அழைத்து சென்றுள்ளாா். பின்னாா், வழக்குப் போட்டால் அதிகம் செலவாகும் என்று கூறி அவா்களிடம் ரூ.3 ஆயிரத்தை பறித்துக்கொண்டு அனுப்பிவைத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவா்கள் கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தி மாநகரக் காவல் ஆணையருக்கு அறிக்கை அளித்தனா்.
இந்நிலையில், பொதுமக்களிடம் அவா் பணம் பறித்தது உறுதியானதையடுத்து காவலா் அப்துல் காதரை பணியிடை நீக்கம் செய்து மாநகரக் காவல் ஆணையா் நா.காமினி உத்தரவிட்டுள்ளாா்.