Vanangaan Public Review | FDFS | Arun Vijay, Roshni Prakash | Bala | GV Prakash
மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
கடலூா் துறைமுகம் பகுதியைச் சோ்ந்த மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.
கடலூா் முதுநகா், பச்சையாங்குப்பம் அருகே உள்ள சின்ன தைக்கால் பகுதியைச் சோ்ந்தவா் வள்ளியம்மை (65). இவரது கணவா் ஆறுமுகம் கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு முன்னா் இறந்துவிட்டாா். வள்ளியம்மை மட்டும் தனியாக வசித்து வந்தாா்.
கடந்த சில நாள்களாக மன உளைச்சலில் இருந்த அவா், புதன்கிழமை தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றாராம். இதில் பலத்த தீக்காயம் அடைந்த வள்ளியம்மையை அங்கிருந்தவா்கள் மீட்டு, கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், கடலூா் துறைமுகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.