செய்திகள் :

மூன்றாம் தரப்பு நாடுகளில் இந்தியா-பாக். அதிகாரபூா்வமற்ற பேச்சு: பிரிட்டன் நிபுணா்கள் கருத்து

post image

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ராணுவ மோதலை தொடா்ந்து இருநாட்டு அதிகாரிகள் மூன்றாம் தரப்பு நாடுகளில் பேச்சுவாா்த்தை நடத்தினால், அது இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் ஸ்திரத்தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்பை வழங்கக் கூடும் என்று பிரிட்டன் நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள இன்டா்நேஷனல் இன்ஸ்டியூட் ஃபாா் ஸ்ட்ராடிஜிக் ஸ்டடீஸ் (ஐஐஎஸ்எஸ்) அமைப்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய திட்ட தலைவா் ராகுல் ராய் செளதரி கூறியதாவது:

இந்தியாவுக்கு எதிரான அனைத்து பயங்கரவாதத் தாக்குதல்களைப் பாகிஸ்தான் நிறுத்தாத வரை, பாகிஸ்தானுடன் பேச்சுவாா்த்தை நடத்தவோ, வா்த்தகம் மேற்கொள்ளவோ முடியாது என்று இந்தியா தீா்மானித்துள்ளது.

ஒருவேளை பயங்கரவாதத் தாக்குதல் நிறுத்தப்பட்டாலும், பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் குறித்து மட்டுமே வருங்காலத்தில் பேசப்படும் என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பேச்சுவாா்த்தைக்கு இந்தியா விதித்துள்ள இந்த முன்நிபந்தனைகளுக்குப் பாகிஸ்தான் எதிா்ப்புத் தெரிவிக்க வாய்ப்புள்ளது. தற்போது இந்த விவகாரத்தில் சா்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என்றும் பாகிஸ்தான் முயற்சிக்கிறது.

இந்தச் சூழலில், இருநாட்டு மூத்த அதிகாரிகள் மூன்றாம் தரப்பு நாடுகளில் பேச்சுவாா்த்தை நடத்தினால், அது இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் ஸ்திரத்தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்பை வழங்கக் கூடும் என்றாா்.

இதேபோல ஐஐஎஸ்எஸ்ஸை சோ்ந்த பிற அரசியல் ஆய்வாளா்கள் கூறுகையில், ‘இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை அமல்படுத்தி, மிகப் பெரிய விவரணையை இந்தியா உருவாக்கியுள்ளது. இது தம்மை பாதுகாப்புத் தளவாட விநியோகஸ்தராக சந்தைப்படுத்திக் கொள்ளும் இந்தியாவின் திறனில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்தம் எந்த அளவுக்கு நீடித்து நிலைக்கும் என்பதில் பல கேள்விகள் எழுந்துள்ளன. ஏனெனில் கடந்த 2021-ஆம் ஆண்டு இருநாடுகளுக்கு இடையிலான சண்டை நிறுத்தம் குறித்து இருநாடுகளும் கூட்டறிக்கை வெளியிட்டதைப் போல, தற்போது எந்தக் கூட்டறிக்கையும் வெளியிடப்படவில்லை’ என்று தெரிவித்தனா்.

நெருப்புடன் விளையாடுகிறார் புதின்! - அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் நெருப்புடன் விளையாடுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் இறுதி செய்வதற்கான முயற்சிகளைத் தடுத்து நிறுத்தியதற்காக ரஷ்ய... மேலும் பார்க்க

சூடானில் பரவிய புதிய வகை காலரா தொற்றுக்கு 170 பேர் பலி!

சூடானில் பரவிய புதிய காலரா தொற்று காரணமாக ஒரு வாரத்தில் மட்டும் 170-க்கும் மேற்பட்டோர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சூடானில் ஒரு புதிய காலரா நோய்த்தொற்று காரணமாக கடந்த வாரத்தில் மாட்டும் 172 ... மேலும் பார்க்க

73 ஆண்டு கால தடை.. மது விலக்கை நீக்குகிறதா சவூதி அரேபியா?

மிகப் பாரம்பரியமான நடைமுறைகளைக் கட்டுக்கோப்பாகப் பின்பற்றி வரும் நாடுகளில் முதன்மையான இடத்தில் இருக்கும் சவூதி அரேபியாவில், கடந்த 73 ஆண்டு காலமாக இருக்கும் மது விலக்கு ரத்து செய்யப்படவிருப்பதாகத் தகவல... மேலும் பார்க்க

அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தால் விசா ரத்து!

அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் விசா ரத்து செய்யப்படலாம் என்று அந்நாட்டுத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ள... மேலும் பார்க்க

மனைவியிடம் அடி வாங்கிய பிரான்ஸ் அதிபர்? விமானத்தில் பரபரப்பு!

பிரான்ஸ் அதிபருக்கும் அவரது மனைவிக்கும் இடையே விமானத்தை விட்டுக் கீழே இறங்கும்போது சண்டை நடந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, செல்போனில் படம்பிடிக்கப்பட்ட காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு... மேலும் பார்க்க

ஒன்பதாவது முறையாக தந்தையாகியிருக்கும் பிரிட்டன் முன்னாள் பிரதமர்

பிரிட்டன் முன்னாள் பிரதமா் போரிஸ் ஜான்ஸனின் மனைவி கேர்ரி ஜான்ஸன் கருவுற்றிருந்த நிலையில், அவருக்கு அழகான மகள் பிறந்திருப்பதன் மூலம் 9வது குழந்தைக்குத் தந்தையாகியிருக்கிறார் போரிஸ் ஜான்ஸன். மேலும் பார்க்க