கச்சத் தீவை மீட்பதே மீனவா் பிரச்னைக்கு தீா்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின்
மனைவியிடம் அடி வாங்கிய பிரான்ஸ் அதிபர்? விமானத்தில் பரபரப்பு!
பிரான்ஸ் அதிபருக்கும் அவரது மனைவிக்கும் இடையே விமானத்தை விட்டுக் கீழே இறங்கும்போது சண்டை நடந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, செல்போனில் படம்பிடிக்கப்பட்ட காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அதில், அதிபர் இம்மானுவேல் மேக்ரான் முகத்தில் அவரது மனைவி ப்ரிகிட் அடித்து காயப்படுத்துவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதன்பின், அவர்கள் இருவரும் விமானத்திலிருந்து ஒரேநேரத்தில் கீழே இறங்கி வருவதும் காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விமானத்தில் வைத்து தனக்கும் தனது மனைவிக்கும் இடையே எவ்வித சண்டையும் நடக்கவில்லை என்று திட்டவட்டமாக நிராகரித்துள்ளார் மேக்ரான். அந்த விடியோவில் இருப்பதைப் போல தன்னை யாரும் அடிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.