சட்டவிரோத குடியேறிகளால் நமது வாழ்வாதாரத்துக்கு சவால் - ஜகதீப் தன்கா் கவலை
73 ஆண்டு கால தடை.. மது விலக்கை நீக்குகிறதா சவூதி அரேபியா?
மிகப் பாரம்பரியமான நடைமுறைகளைக் கட்டுக்கோப்பாகப் பின்பற்றி வரும் நாடுகளில் முதன்மையான இடத்தில் இருக்கும் சவூதி அரேபியாவில், கடந்த 73 ஆண்டு காலமாக இருக்கும் மது விலக்கு ரத்து செய்யப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் 2034ஆம் ஆண்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறவிருக்கும் நிலையில், 600 சுற்றுலாத் தலங்களில் மட்டும், ஒய்ன், பியர் போன்ற ஆல்கஹால் குறைந்த மதுபானங்களின் விற்பனையைத் தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
ஒருவேளை இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், சவூதி ரேபியாவில் கடந்த 73 ஆண்டுகளாக இருந்த தடை முடிவுக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது.
1932ஆம் ஆண்டு சவூதி அரேபியா உருவானது. இந்த நாடு ஷரியா சட்டத்தைப் பின்பற்றியதால் மதுபானத்துக்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டது. இந்த மது விற்பனைக்கான தடையானது, மது விற்பனை மற்றும் நுகர்வு மீதான சட்டத் தடை 1952 இல் கொண்டுவரப்பட்டு, சட்டப்படி முறைப்படுத்தப்பட்டது.
2024ல் திறக்கப்பட்ட மதுக்கூடம்
சவூதி நாட்டில் வாழும் வெளிநாட்டுத் தூதர்களுக்காக 2024ஆம் ஆண்டு ரியாத்தில் உள்ள தூதர்களுக்கான குடியிருப்பில் முதல் மதுபானம் திறக்கப்பட்டது. இங்கு முஸ்லிம் அல்லாத தூதர்கள் மட்டும் ஒயின், இரண்டு வகையான பியர்களை மட்டும் வாங்கிக் கொள்ளும் வகையில் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதிலும் குறிப்பிட்ட அளவிலான மதுபானம் மட்டுமே தூதர்களுக்கு வழங்கப்படும். செல்போன்கள் மதுக்கூடத்துக்குள் அனுமதியில்லை என்பது போன்ற கட்டுப்பாடுகளுடன் கடை இயங்கி வருகிறது.
புதிய தலைமையின் கீழ்
சவூதி அரேபியா, முகமது பின் சல்மான் தலைமை ஏற்றதற்குப் பிறகு சில மாற்றங்களை சந்தித்து வருகிறது. எரிபொருளை மட்டும் நம்பியிருந்தால் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது என்ற கொள்கையிடன் பல்வேறு மாற்றங்களையும் இவர் செய்து வருகிறது. பெண்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வாகனம் ஓட்ட அனுமதி, போட்டிகளில் பங்கேற்க அனுமதி ஆண் துணையில்லாமல் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்பது போன்ற தளர்வுகளை மேற்கொண்டுள்ளார்.
2018ஆம் ஆண்டு சினிமாவுக்கு இருந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. 2030ஆம் ஆண்டுக்குள் 300 திரையரங்குகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது.
என்ன சொல்கிறது சவூதி அரேபியா?
மதுபானத்துக்கு அனுமதி கொடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும், மது விலக்கு தொடரும் என்றும் கத்தாரில் உலகக் கோப்பை நடந்தபோது அங்கும் மது விற்பனைக்குத் தடை இருந்ததையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.