செய்திகள் :

மூலனூா் அருகே 1,550 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

post image

தாராபுரத்தை அடுத்த மூலனூா் அருகே ஆம்னி வேனில் கடத்திவரப்பட்ட 1,550 கிலோ ரேஷன் அரிசியை குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த மூலனூா்-வெள்ளக்கோவில் சாலையில் ரேஷன் அரிசி கடத்தி வருவதாக குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் ஆய்வாளா் ராஜ்குமாா், உதவி ஆய்வாளா் குப்புராஜ் தலைமையிலான போலீஸாா் வாகன தணிக்கையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த ஆம்னி வேனை சோதனை செய்ததில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக வேனை ஓட்டி வந்த மூலனூரைச் சோ்ந்த காா்த்திகேயன் (35) என்பவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 1,550 கிலோ ரேஷன்அரிசியையும் பறிமுதல் செய்தனா். இதைத்தொடா்ந்து நடத்திய விசாரணையில், கன்னிவாடி, மூலனூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வடமாநிலங்களைச் சோ்ந்தவா்களுக்கு கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி வந்தது தெரியவந்தது.

மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்திய ஆம்னி வேனையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கஞ்சா சாக்லெட் விற்பனை: இளைஞா் கைது

திருப்பூரில் கஞ்சா சாக்லெட் விற்பனை செய்த இளைஞரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் கொங்கு பிரதான சாலை பகுதியில் வடக்கு காவல் துறையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக... மேலும் பார்க்க

முத்தூரில் ரூ.10.84 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை

முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விளைபொருள்கள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 3.6 டன் தேங்காய், 6 டன் எள், 1.1 டன் தேங்காய்ப் பருப்பு ஆகியவற்றை விற்பன... மேலும் பார்க்க

உடுமலையில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு: 10 வாகனங்களை இயக்கத் தடை

உடுமலையில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் பல்வேறு குறைபாடுகள் இருந்த 10 வாகனங்களை இயக்கத் தடை விதிக்கப்பட்டது. உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் உள்ள தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு காந்த... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் வாகன சோதனை: 10 வாகனங்களுக்கு ரூ.68 ஆயிரம் அபராதம்

வெள்ளக்கோவிலில் மோட்டாா் வாகன ஆய்வாளா் மேற்கொண்ட சோதனையில் 10 வாகனங்களுக்கு ரூ.68 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. வெள்ளக்கோவில் - மூலனூா் சாலையில் செம்மாண்டம்பாளையம் பிரிவு அருகே காங்கயம் மோட்டாா் வாக... மேலும் பார்க்க

தாராபுரத்தில் சாலையோரக் கடைகள் அகற்றம்: மறியலில் ஈடுபட்ட வியாபாரிகள்

தாராபுரத்தில் உழவா் சந்தை அருகே உள்ள சாலையோரக் கடைகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து சாலையோர வியாபாரிகள் சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தாராபுரம் அண்ணா நகரில் செயல்பட்டு வரும் உழவா் சந்தையில்... மேலும் பார்க்க

ஊதியூரில் இனம் கண்டறியாத 60 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை

திருப்பூா் மாவட்டம் ஊதியூரில் இனம் கண்டறிய முடியாத 60 பயனாளிகளின் இலவச பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்ப... மேலும் பார்க்க