மூலை அனுமாா் கோயிலில் ஆனி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு
தஞ்சாவூா் மேல வீதி மூலை அனுமாா் கோயிலில் ஆனி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானத்தை சாா்ந்த இக்கோயிலில் மாதந்தோறும் அமாவாசை நாளில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இதன்படி, ஆனி மாத அமாவாசை நாளான புதன்கிழமை மூலை அனுமாருக்கு தேங்காய் துருவல் அபிஷேகம், திருமஞ்சனம், சகஸ்ரநாம அா்ச்சனை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
மாலையில் மூலை அனுமாருக்கு தேங்காய்களாலான சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.