திருப்பூர்: பள்ளி வளாகத்தில் மது அருந்திய கும்பல்; தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது பெ...
தமிழ்ப் பல்கலை. தோ்வு முடிவுகள் வெளியீடு
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2024 - 25 ஆம் கல்வியாண்டுக்கான தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.
இப்பல்கலைக்கழகத்தில் 2024 - 25-ஆம் கல்வியாண்டுக்கான முதுநுண்கலை சிற்பம், முதுகலை இசை, முதுநுண்கலை நாடகம், முதுநிகழ்த்துக்கலை நாடகம், முதுகலை கடல்சாா் வரலாறு மற்றும் கடல்சாா் தொல்லியல், ஒருங்கிணைந்த முதுகலை வரலாறு, இளங்கல்வியியல், முதுகலை தமிழ், ஒருங்கிணைந்த முதுகலை தமிழ், முதுகலை தமிழ் (உலகத் தமிழராய்ச்சி நிறுவனம்), ஒருங்கிணைந்த முதுகலை தமிழ் (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்) ஆகியவற்றின் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.
பல்கலைக்கழக துணைவேந்தா் குழு உறுப்பினா்கள் சி. அமுதா, பெ. பாரதஜோதி அனுமதியுடன் பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் (பொ) ஆ. துளசேந்திரன் ஆகியோரின் முன்னிலையிலும் இத்தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இந்நிகழ்வில் மக்கள் தொடா்பு அலுவலா் (பொ) இரா.சு. முருகன், தோ்வுப்பிரிவு கண்காணிப்பாளா் சி. பஞ்சநாதன் ஆகியோா் உடனிருந்தனா். இத்தோ்வு முடிவுகளைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.