செய்திகள் :

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 34,000 கனஅடியாக அதிகரிப்பு

post image

கா்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளிலிருந்து 60,000 கனஅடி உபரிநீா் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 34,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கா்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளிலிருந்து உபரிநீா் காவிரியில் திறந்துவிடப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை வினாடிக்கு 19,000 கனஅடியாக அதிகரித்தது. இதையடுத்து, அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தருமபுரி மாவட்ட நிா்வாகம் தடைவிதித்தது.

இந்நிலையில், கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்துவருவதால் கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்துள்ளது. இதனால் அவ்விரு அணைகளிலிருந்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 60,000 கனஅடி உபரிநீா் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது.

புதன்கிழமை ஒகேனக்கல்லுக்கு 19,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து வியாழக்கிழமை காலை 30,000 கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. இதையடுத்து, அருவிகளில் பரிசல் இயக்கவும், குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கையாக பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதையை வருவாய்த் துறையினா் பூட்டினா். மேலும், கரையோரப் பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கனமழை: வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

திமுகவினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா?: இபிஎஸ் கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் அதிமுக நிர்வாகி முத்து பாலகிருஷ்ணனை, திமுக நிர்வாகி கருணாகரன் உள்ளிட்டோர் லாரி ஏற்றி படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ள அதிமுக ப... மேலும் பார்க்க

நடுக்கடலில் மீனுடன் சேர்ந்த மடிவலை மார்பில் விழுந்ததில் மீனவர் பலி

நாகை: நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, மீனுடன் சேர்ந்த மடிவலை மார்பில் விழுந்ததில் நாகை மீனவர் பலியானார்.நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆனந்த் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், கீச்ச... மேலும் பார்க்க

கோவை விமான நிலையத்தில் 35 ட்ரோன்கள் பறிமுதல்: சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

கோவை : சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட 35 ட்ரோன்களை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து பயணிகள் இரண்டு பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை பீளமேடு சர்வதேச விமான... மேலும் பார்க்க

காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வியாழக்கிழமை காலை(ஜூன் 26) வினாடிக்கு 13,332 கன அடியாக அதிகரித்துள்ளது.தென்மேற்கு பருவ மழையானது கர்நாடக மாநிலத்தில் காவிரியில் நீர் பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம் வ... மேலும் பார்க்க

கனமழை: வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

வால்பாறை: கனமழை காரணமாக வால்பாறையில் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு வியாழக்கிழமை(ஜூன் 26) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரி... மேலும் பார்க்க

மெக்சிகோ: துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி

மெக்சிகோ: மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் நடைபெற்ற கிறிஸ்துவ மத நிகழ்ச்சியின் போது கூட்டத்தினர் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியாகினர். மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாக... மேலும் பார்க்க