மூளையை ஆரோக்கியமாக வைக்கும் 5 விஷயங்கள்!
அளவில் சிறியதாயினும் செயலில் பெரிதானது மூளை. `உலகின் மிகப் பெரிய இயந்திரம் மூளை’ என்றே சொல்லலாம். மூளைதான் மனித உடலின் தலைமைச் செயலகமாகச் செயல்படுகிறது.
பேசுவது, சாப்பிடுவது, சிந்திப்பது, தூங்குவது, மூச்சுவிடுவது, பல்வேறு நினைவுகள், உணர்வுகள், இதயத்துடிப்பு, வளர்ச்சி… ஏன், உயிரும்கூட மூளையைச் சார்ந்துதான் இருக்கிறது. மூளையானது அனைத்து அதிகாரத்துடன் அனைவருக்கும் உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரியாக இயங்குகிறது.

நம் மூளையில், தோராயமாக 8,600 கோடி நியூரான்கள் உள்ளன. உடலில் நடக்கும் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் இந்த நியூரான்களின் இயக்கம்தான் காரணம். மூளையில் உள்ள நியூரான் என்ற செல்கள்தான் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தில் நடக்கும் விஷயங்களைத் தெரிவிக்கின்றன. அதற்கு ஏற்பச் செயல்படும்படி உடலிலுள்ள தசைகளுக்கும் உத்தரவு கிடைக்கிறது.
மூளையில் 2 வயதில்தான் மிக அதிக செல்கள் உருவாகின்றன.18 வயதில் மனிதனின் மூளை வளர்வதை நிறுத்திக்கொள்கிறது. பிறந்த குழந்தையின் மூளையானது 400 கிராம் வரை எடை இருக்கும். வளர்ந்த ஒரு மனிதனின் மூளை ஒன்றரை கிலோ எடையுடன் காணப்படும்.
ஒவ்வொரு நொடியும் நமது மூளையில் ஒரு லட்சம் வரைக்குமான அமில மாற்றங்கள் நடக்கின்றன. மூளைக்கு 10 நொடிகள் ரத்தம் பாயவில்லை என்றால் மயக்கம் வந்துவிடும்.

முட்டை, பச்சைக்காய்கறிகள், பூண்டு, கேரட், வல்லாரைக்கீரை, வால் நட், பாதாம், மீன், வைட்டமின் சி, டி மற்றும் பி 12, ஒமேகா த்ரீ ஃபேட்டி ஆசிட் நிறைந்த உணவுகள்.
மனஅழுத்தத்தின்போது சுரக்கும் கார்ட்டிசால் (Cortisol) என்ற ஹார்மோன் மூளையை பாதிக்கும். `இதனால் ஞாபகசக்தி குறையும்’ என்கிறார்கள் மருத்துவர்கள். மனஅழுத்தம் குறைக்கும் விஷயங்களில் நேரத்தைச் செலவழிப்பது நல்லது.
தூக்கம், மூளையின் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான ஒன்று. ஆழ்ந்த உறக்கம், மூளையின் கற்றல் திறனையும் அதிகரிக்கும்.
சுடோகு, குறுக்கெழுத்து போன்றவை நினைவில் தேங்கியிருக்கும் பழைய விஷயங்களை மீட்டெடுக்க உதவும். செஸ் விளையாடுவது, புதிய மொழிகளைக் கற்பது போன்றவை மூளையைக் கூர்மையாக்கும்.

உடற்பயிற்சி உடலை மட்டுமின்றி மூளையின் செயல்திறனையும் அதிகரிக்கச் செய்யும். பார்கின்சன் போன்ற மூளை சார்ந்த நோய்கள் வராமல் தவிர்க்க, உடற்பயிற்சி பெரிதும் உதவும். யோகாசனம் செய்வது மனதுக்கும் மூளைக்கும் அமைதியைத் தரும்.
தினமும் ஏதேதோ பணிகள் செய்கிறோம், இவற்றில் நமக்குத் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் பல செயல்கள் நமது மூளையை பாதிக்கின்றன.
இன்றைக்கு, பார்கின்சன், அல்சைமர் உள்ளிட்ட பல்வேறு மூளை நரம்பு தொடர்பான நோய்கள்தான் மிகப் பெரிய பிரச்னை. 1,000-க்கும் மேற்பட்ட மூளை தொடர்பான பிரச்னைகள் உள்ளதாக `சொசைட்டி ஆஃப் நியூரோசயின்சஸ்' சொல்கிறது.
மூளையை பாதுகாப்பது வாழ்க்கையைப் பாதுகாப்பதுபோல. கவனமுடன் கையாள்வோம் வாழ்க்கையையும் மூளையையும்.
தகவல்: டாக்டர் சவுண்டப்பன் (மேலும் விரிவான தகவல்களுக்கு விகடன் பிரசுர வெளியீடான ‘மூளை A to Z’ புத்தகத்தைப் படிக்கவும்)
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...