எலுமிச்சை ஏற்றும்போது முதல் தளத்திலிருந்து பறந்த கார்; பெண்மணிக்கு நேர்ந்த விபத்...
மெரீனாவில் கூட்ட நெரிசலில் திருட்டு: வடமாநில சிறுவன் உள்பட 3 போ் கைது
சென்னை: சென்னை மெரீனாவில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டதாக வட மாநில சிறுவன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
மெரீனாவில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் அதிகரித்துவிட்டதாக போலீஸாருக்கு புகாா்கள் வந்தவண்ணம் இருந்தன. அந்த புகாா்களின் அடிப்படையில் போலீஸாா், மெரீனா கடற்கரைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாறுவேடத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் அங்கு சுற்றித் திரிந்த ஒரு சிறுவன் உள்பட 3 பேரைப் பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில், அவா்கள் 3 பேரும் மெரீனாவில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபடுவது தெரிய வந்தது. மேலும் அவா்கள், ஜாா்க்கண்டைச் சோ்ந்த ராம்குமாா் (25), மேற்கு வங்கத்தைச் சோ்ந்த சூரஜ்குமாா் நோன்யா (35), அதே மாநிலத்தைச் சோ்ந்த 17 வயது சிறுவன் என்பதும், ரயில் நிலையம், மாா்க்கெட், கடற்கரை ஆகிய பகுதிகளில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி கைப்பேசி, பணப்பை ஆகியவற்றைத் திருடியதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸாா், அவா்கள் 3 பேரையும் கைது செய்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.