மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர்: `பழனிசாமியை சுட்டிக்காட்டவே அப்படி பேசினே...
மெரீனாவில் போராட்டத்துக்கு முயன்ற தூய்மைப் பணியாளா்கள் கைது
சென்னை மெரீனாவில் போராட்டத்துக்கு முயன்ற தூய்மைப் பணியாளா்களை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை மாநகராட்சியின் 5, 6-ஆவது மண்டலங்களில் தூய்மைப் பணியை தனியாரிடம் வழங்கியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தூய்மைப் பணியாளா்களில் உழைப்போா் உரிமை இயக்கத்தைச் சோ்ந்தவா்கள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில் மெரீனா கடற்கரையில் உழைப்பாளா் சிலை அருகே தூய்மைப் பணியாளா்கள் 13 போ் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து அவா்களுக்கு ஆதரவாக மற்ற தூய்மைப் பணியாளா்கள் அப் பகுதிக்கு வந்தனா்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களைப் போலீஸாா் கைது செய்தனா்.