நாள்கணக்கில் உலகப் பயணம்; மணிப்பூரில் 5 மணி நேரம்தான்! -காங். விமர்சனம்
மேகாலயா முன்னாள் முதல்வர் டி.டி. லபாங் காலமானார்
உடல்நலக் குறைவு காரணமாக மேகாலயா முன்னாள் முதல்வர் டி.டி. லபாங் வெள்ளிக்கிழமை காலமானார்.
மூத்த அரசியல் தலைவரும், மேகாலயா முன்னாள் முதல்வருமான டி.டி. லபாங்(93) நீண்ட காலமாக வயது தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை அவர் காலமானார் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அவர், காலமானபோது முன்னாள் எம்.பி.யும் காங்கிரஸ் தலைவருமான வின்சென்ட் எச். பாலா மருத்துவமனையில் உடன் இருந்தார். மறைந்த முன்னாள் முதல்வருக்கு திங்கள்கிழமை அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மணிப்பூருக்கு மோடி வருகை: காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!
1972ஆம் ஆண்டு சுயேட்சை வேட்பாளராக வெற்றி பெற்று சட்டப்பேரவையில் நுழைந்த அவர், நான்கு முறை வடகிழக்கு மாநிலத்தின் முதல்வராகவும் பொறுப்பு வகித்துள்ளார். வாழ்நாள் முழுவதும் காங்கிரஸ்காரராக இருந்த டி.டி. லபாங், பின்னர் 2018ஆம் ஆண்டு தேசிய மக்கள் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.