மேக் இன் இந்தியா திட்டம் தோல்வி! -ராகுல் காந்தி
‘இந்தியாவில் தயாரிப்போம்’ (மேக் இன் இந்தியா) திட்டத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று(பிப். 3) மக்களவையில் குறிப்பிட்டு பேசினார்.
அவர் பேசியதாவது; “‘இந்தியாவில் தயாரிப்போம்’ (மேக் இன் இந்தியா) திட்டத்தை பிரதமர் முன்மொழிந்தார்... இது ஒரு சிறந்த யோசனைதான்... அதேவேளையில் அதனால் விளைந்திருக்கும் பலன்களை நம் கண்முன் இப்போது கண்டுகொண்டிருக்கிறோம்.
இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி(ஜிடிபி) கடந்த 2014-ஆம் ஆண்டு 15.3 சதவிகிதமாக இருந்தது, ஆனால், ஜிடிபி இன்று 12.6 சதவிகிதமாகச் சரிந்துள்ளது. இது, கடந்த 60 ஆண்டுகளில் உற்பத்தி துறையிலிருந்து இதுவரை கிடைக்கப்பெறாத மிகக்குறைந்த பங்களிப்பாகும்.
இதற்காக பிரதமரை குற்றஞ்சாட்டவில்லை. அவர் எந்தவொன்றையும் முயற்சிக்கவில்லை என்றும் சொல்லவில்லை. அவரது முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது” என்றார்.