விமானப்படையில் இசைக் கலைஞர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
கு. இராசசேகரன்
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,105 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று(மே 4) காலை விநாடிக்கு 3,619 கன அடியிலிருந்து 4,105 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையின் நீர்மட்டம் 107.95 அடியிலிருந்து 108.12 அடியாக உயர்ந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது, அணையின் நீர் இருப்பு 75.76 டிஎம்சியாக உள்ளது.