செய்திகள் :

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு!

post image

கு. இராசசேகரன்

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து மாலை 4:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 29,360 கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடகத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியின் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளின் உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று(ஆக. 31) மாலை 4:00 மணிக்கு வினாடிக்கு 29,360 கன அடியாக அதிகரித்துள்ளது.

நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 20,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 118.86அடியாகவும் நீர் இருப்பு 91.66 டிஎம்சியாக உள்ளது.

அன்புமணிக்கு மீண்டும் கெடு விதித்த ராமதாஸ்!

கட்சி விரோத நடவடிக்கை உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதிலளிக்க வரும் செப். 10 வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்... மேலும் பார்க்க

லண்டனிலும் தமிழக வளர்ச்சிக்கான முதலீட்டாளர் சந்திப்பு: முதல்வர் ஸ்டாலின்

வெளிநாடு பயணம் குறித்து தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: ஜெர்மனியிலிருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டன... மேலும் பார்க்க

தில்லியில் தமிழக பாஜக தலைவர்களுடன் அமித் ஷா ஆலோசனை!

தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தில்லியில் தமிழக பாஜக தலைவர்களுடன் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் க... மேலும் பார்க்க

அதிமுக சி. விஜயபாஸ்கர் வீடு, தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

புதுக்கோட்டையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டிற்கும் தனியார் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அத... மேலும் பார்க்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து!

சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டி பகுதியில் சிவகாசியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான ந... மேலும் பார்க்க

கீழணையிலிருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவைத்தார் அமைச்சர்!

தஞ்சை கீழணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் உள்ள கீழணை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆங்கி... மேலும் பார்க்க