செய்திகள் :

மேட்டூர் அணையில் நீர் திறப்பு; காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

post image

காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணை நிரம்பியுள்ளதால் அணைக்கு வரும் நீர் முழுவதுமாக உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த 20-ம் தேதி பிற்பகலில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதனைத் தொடர்ந்து அணைக்கு வரும் நீர் வரத்து முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று மாலை காவிரியில் விநாடிக்கு 45 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

காவிரி ஆறு

இந்த நிலையில் அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரிப்பால் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர், இரவு 11.00 மணி முதல் 45,000 கன அடியிலிருந்து 55,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக 22,500 கன அடியும், எல்லிஸ் உபரி (16 கண் மதகு) வழியாக 32,500 கன அடியும் திறக்கப்பட்டுள்ளது.

திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக விநாடிக்கு 60,000 கன அடி வரை அதிகரிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் நீர்வளத் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Rain Updates: வங்கக்கடலில் உருவாகிறது 'Montha' புயல் - சென்னையில் மழை எப்படி இருக்கும்?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் பல மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வரும் 26 ஆம் தேதி ஆழ்ந்தக் காற்... மேலும் பார்க்க

Rain Updates: வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - புயலாக வலுபெறுமா?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் பல மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், நீலகிரி, ஈரோடு, வேலூர், திருப்பத்த... மேலும் பார்க்க

Rain Updates: 'இந்த வாரம் முழுதும் மழை' - வடகிழக்கு பருவமழை தீவிரம்; எந்தெந்த மாவட்டங்களுக்கு Alert?

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக மாறவுள்ளது என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.இதனால்தான், தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மழை பெய்து வருகிறதாம... மேலும் பார்க்க

சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வ... மேலும் பார்க்க

Rain Alert: கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை? | முழு விவரம்

தமிழ்நாட்டில் கடந்த வாரம் (அக்டோபர் 16) வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் ஒரு வரமாக மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.குறிப்பாக அக்டோபர் 21, 22 ஆகிய தேதிகளில் க... மேலும் பார்க்க