``போலீஸ் சிரிக்கிறாங்க... தெய்வச்செயல் மேல நடவடிக்கை எடுக்கணும்’’ - ஆளுநர் மாளிக...
மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வியாழக்கிழமை காலை 13,606 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக 7-ஆவது நாளாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
புதன்கிழமை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 12,819 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, வியாழக்கிழமை காலை வினாடிக்கு 13,606 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அரசுப் பேருந்து - டெம்போ வேன் விபத்து: 6 பேர் பலி
நீர் திறப்பைவிட வரத்து அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நீர் வரத்து அதிகரித்துள்ளதால் புதன்கிழமை 110.03 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், வியாழக்கிழமை காலை 110.77 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 79.50 டிஎம்சியாக உள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 110.77அடியாக உயர்ந்துள்ளது.
கடந்த இரண்டு நாள்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 1.44 அடி உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து இருப்பதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.