கரூர் துயரம்: "பிணங்களின் மீது சில தலைவர்கள் அரசியல் செய்கின்றனர்" - செல்வப்பெரு...
மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணை நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 116.29 அடியாக சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,358 கன அடியிலிருந்து வினாடிக்கு 5,312 கன அடியாக குறைந்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18,000 கனஅடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் வியாழக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.02 அடியிலிருந்து 116.29 அடியாக குறைந்தது.
அணையின் நீர் இருப்பு 87.67 டிஎம்சியாக உள்ளது.