மேட்டூர் அணை நீர்மட்டம்: 120 அடியை எட்டுகிறது!
கு. இராசசேகரன்
சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று(டிச. 24) காலை விநாடிக்கு 2,886 கன அடியிலிருந்து 2,701 கன அடியாக குறைந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 500 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 119.32 அடியிலிருந்து 119.41 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 92.53 டிஎம்சியாக உள்ளது.
மேட்டூர் அணை நீர் வரத்தும், நீர் திறப்பும் இதே நிலையில் இருந்தால், இன்னும் ஓரிரு நாள்களில் மேட்டூர் அணை இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக நிரம்பும் வாய்ப்பு இருக்கிறது.