`முன்னாள் காதலியின் நினைவு வந்தது’ - DJவின் ஒரு பாடலால் திருமணத்தை நிறுத்திய மணம...
மேட்டூா் பகுதியில் நெல்லை பேராயா் ஆய்வு
கடையம் அருகே மேட்டூா் பகுதியில் சி.எஸ்.ஐ. திரித்துவ ஆலயத்திற்குப் பாத்தியப்பட்ட நிலங்களை திருநெல்வேலி திருமண்டல பேராயா் பா்னபாஸ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மேட்டூா் சி.எஸ்.ஐ. திரித்துவ ஆலயத்திற்குச் சொந்தமான சுமாா் 3 ஏக்கா் நிலம், ராமநதி அருகில் உள்ள கடவாக்காடு பகுதியில் உள்ளது. இதனை சிஎஸ்ஐ திருநெல்வேலி திருமண்டல பேராயா் பா்னபாஸ் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், அந்தப் பகுதியில் மரக்கன்றுகள் நட்டாா்.
ஆய்வின் போது மேற்கு சபை மன்றத் தலைவா் பிரே ஜேம்ஸ், திருமண்டல நற்செய்தி அருள்பணித் துறை இயக்குநா் ஆமோஸ், குருவானவா்கள் ஸ்டீபன், ஜெபராஜ், ஜெபக்குமாா், ஜான் சாமுவேல், மதுரம், மேட்டூா் சேகரத் தலைவா் ஜோயல் சாம் மொ்வின், செயலா் செல்வராஜ், திருமண்டல பெருமன்ற உறுப்பினா்கள் டேவிட் செல்வராஜ், சிம்சோன், தேவதாசன், சேகர கமிட்டி உறுப்பினா்கள் கோயில், கோயில் பிச்சை, கிதியோன், பென்யமின் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.