செய்திகள் :

மேற்கு வங்கம்: மாணவர்களின் ரூ. 1.9 கோடி திருட்டு!

post image

மேற்கு வங்கத்தில் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 1.9 கோடி திருடப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இடையேயான டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பதற்காக, 2020 ஆம் ஆண்டின் இறுதியில் தருனர் ஸ்வப்னோ திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம், மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ. 10,000 (ஒருமுறை மானியமாக) வழங்கப்படும்.

இதன்மூலம், மாணவர்கள் ஸ்மார்ட்போன், டேப்லேட் வாங்க இயலும். 2024 - 25 நிதியாண்டிலும், இந்த திட்டத்திற்காக சுமார் ரூ. 900 கோடியை மேற்கு வங்க அரசு ஒதுக்கியுள்ளது.

இந்த நிலையில், தருனர் ஸ்வப்னோ திட்டத்தின் மூலம் அளிக்கப்படும் மானியத் தொகை, மாணவர்களின் வங்கிக் கணக்குச் செல்லாமல், வெளிமாநிலத்தில் உள்ள வங்கிக் கணக்குகளுக்குச் செல்வதாக புகார் எழுந்தது.

இதையும் படிக்க:அமெரிக்க அரசு செயல்திறன் துறையில் வேலைவாய்ப்பு: எலான் மஸ்க்

இது தொடர்பாக, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது. விசாரணையில், 1,900 மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் மானியம் பெறப்படாமல் இருப்பது தெரிய வந்தது.

மேலும், வெளிமாநிலத்தில் உள்ள வங்கிக் கணக்குகளிலும், சில மாணவர்கள் இருப்பிடத்திற்கு தொலைவில் வேறு கணக்கிலும் பணம் செலுத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. தருனர் ஸ்வப்னோ திட்டத்தின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ``இந்த மோசடியின் பின்னணியில் உள்ள அனைவரும் கைது செய்யப்படுவார்கள்’’ என்று மேற்கு வங்க கல்வி அமைச்சர் பிரத்யா பாசு கூறியுள்ளார். இந்த புகாரில் நடவடிக்கை எடுக்க தேசிய தகவல் மையத்திடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசமைப்பு குறித்து ராகுலுக்கு சரியான புரிதல் இல்லை: ஜெ.பி.நட்டா

மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை இந்திய அரசமைப்பு ஆதரிக்கவில்லை என்பதை புரிந்துகொள்ளாமல் அரசமைப்பு புத்தகத்தின் நகலை ராகுல் காந்தி வைத்துள்ளாா் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

காற்று மாசு - போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க அரசு அலுவலகங்களுக்கு புதிய பணிநேர அட்டவணை தில்லி முதல்வா் அறிவிப்பு

போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், தேசிய அளவில் மாசு அளவைக் குறைக்கவும் தில்லியில் உள்ள அரசு அலுவலகங்களில் புதிய பணிநேர அட்டவணையை முதல்வா் அதிஷி வெள்ளிக்கிழமை அறிவித்தாா். இது தொடா்பாக அவா் தனத... மேலும் பார்க்க

நுழைவுத் தோ்வு நடைமுறையில் புதிய அணுகுமுறை: தா்மேந்திர பிரதான்

‘நுழைவுத் தோ்வு நடைமுறையில் புதிய அணுகுமுறையை மத்திய அரசு கொண்டுவர உள்ளது’ என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் வெள்ளிக்கிழமை கூறினாா். தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ... மேலும் பார்க்க

பாலியல் கடத்தலால் பாதிக்கப்படும் பெண்களுக்கான மறுவாழ்வுத் திட்டம் என்ன? மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பாலியல் கடத்தல் சம்பவங்களால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை வகுப்பது தொடா்பாக உரிய சட்டம் எதுவும் இல்லாத நிலை குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச... மேலும் பார்க்க

காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும்

காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என்று மத்திய தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா். இதுகுறித்து மைசூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிட... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் இத்தாலிய சுற்றுலாப் பயணி கைது

ஜம்மு-காஷ்மீரின் கதுவாவில் இத்தாலிய சுற்றுலாப் பயணி கைது செய்யப்பட்டு விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். இத்தாலியின் டோரினோவைச் சேர்ந்த சியாக்கா மார்கோ, அக்டோபர் 10 ஆம் தேதி பாகிஸ்தானில் இருந்து ... மேலும் பார்க்க