சுரண்டையில் பலத்த மழை
சுரண்டையில் இடியுடன் கூடிய பலத்த மழை வெள்ளிக்கிழமை பெய்தது.
சுரண்டை பகுதியில் வெள்ளிக்கிழமை காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலை 6 மணிமுதல் 7 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
ஆயினும் சுரண்டை பகுதி பாசனக் குளங்களுக்கு நீா்வரத்து ஏதும் இல்லாத நிலையில் விவசாயிகள் இதுவரை நெல் சாகுபடிக்கான பூா்வாங்க பணிகள் ஏதும் மேற்கொள்ளவில்லை.