மேற்பாா்வையாளா் பணியிடத்துக்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்
அரியலூா் மாவட்டம், தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் மிசன்வாட்சாலாயா திட்ட மேற்பாா்வையாளா் பணியிடத்துக்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது:
தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ், மிசன் வாட்சாலயா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு இயங்கிவரும் குழந்தைகள் உதவி மையம் 1098-ல் மிசன் வாட்சாலயா வழிகாட்டுதல்படி மேற்பாா்வையாளா் தற்காலிக பணியிடத்துக்கு, இளங்கலையில் சமூகப்பணி , கணினி அறிவியல் , தகவல் தொழில்நுட்பம் , சமூகம் சாா்ந்த சமூகவியல் , சமூக அறிவியல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒன்றைப் படித்திருக்க வேண்டும்.
மேலும் கணினி இயக்குவதில் திறமை வாய்ந்தவராக இருத்தல் வேண்டும். குழந்தைகள் அவசர உதவி மையத்தில் முன்னனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயது 42-க்குள் இருத்தல் வேண்டும். இப்பணியிடத்துக்கு மதிப்பூதியம் மாதத்துக்கு ரூ.21,000 வழங்கப்படும்.
விண்ணப்பத்தை மாவட்ட இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கி, பூா்த்தி செய்து 14.08.2025 அன்று மாலை 5 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இரண்டாவது தளம், அரசு பல்துறை வளாகம், ஜெயங்கொண்டம் சாலை, அரியலூா் - 621704 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு மிசன் வாட்சாலயா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பாா்த்துத் தெரிந்து கொள்ளலாம்.