திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
மேலக்கருங்குளம் இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
மேலக்கருங்குளத்தைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
முன்னீா்பள்ளம் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்டதாக மேலக்கருங்குளம், பாவேந்தா் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் மகாராஜா (25) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இவா், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் பரிந்துரைத்தாா். இதையடுத்து ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் உத்தரவின்பேரில் மகாராஜன், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டாா்.