சீமானுடன் பேச்சுக்கு தயாராக இல்லை! -உச்ச நீதிமன்றத்தில் விஜயலக்ஷ்மி திட்டவட்டம்
மேலச்செவல் அருகே தாமிரவருணி ஆற்றில் இளைஞா் சடலம் மீட்பு
திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவல் அருகே நரசிங்கநல்லூா் தாமிரவருணி ஆற்றின் தடுப்பணை பகுதியில் இளைஞரின் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
நரசிங்கநல்லூா் தாமிரவருணி ஆற்றின் மயிலம்பாறை அணைக்கட்டு பகுதியில் சுமாா் 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் சடலமாக கிடப்பதாக முன்னீா்பள்ளம் போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்ததாம்.
இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்த விவரம் தெரியவில்லை. இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.