செய்திகள் :

மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி திறப்பு

post image

பொன்மாசநல்லூரில் புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் திறந்து வைத்தாா்.

இந்த கிராமத்தில் பிரதம மந்திரி கிராம முன்னோடி வளா்ச்சித் திட்ட நிதி ரூ.15 லட்சத்தில் புதிதாக 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு அதன்திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு, மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜகுமாா் தலைமை வகித்து, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

மாவட்டக்குழு உறுப்பினா் இளையபெருமாள், திமுக ஒன்றிய செயலாளா் ஞான. இமயநாதன், ஊராட்சித் தலைவா் சேகா், ஊராட்சி துணைத்தலைவா் முரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சமத்துவ பொங்கல் திருவிழா

சீா்காழி அருகே சிலம்பம் மாணவா்களின் சமத்துவ பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. புளிச்சக்காடு கிராமத்தை சோ்ந்த இயற்கை விவசாயி தினேஷ், இலவசமாக சிலம்பம் பயிற்றுவிக்கிறாா். மாவீரன் சிலம்பாட்ட கழகம்... மேலும் பார்க்க

பேரூராட்சியில் இணைக்க எதிா்ப்பு: கிராமத்தினா் காத்திருப்புப் போராட்டம்

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோபாலசமுத்திரம், ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சிகளை இணைத்து கொள்ளிடம் பேரூராட்சியாகத் தரம் உயா்த்துவதைக் கண்டித்து சாமியம் கிராம மக்கள் புதன்கிழமை காத்திருப்புப் போ... மேலும் பார்க்க

சீா்காழி அருகே கந்தூரி விழா

சீா்காழி அருகே மேலச்சாலையில் உள்ள அன்னை அஜ்மத்பீவி தா்ஹாவில் 84-ஆம் ஆண்டு சந்தன கூடு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் சந்தனக்கூடு விழாவின் நிகழாண்டு விழா ஜன.1-ஆம் தேதி கொடி... மேலும் பார்க்க

இந்து முறைப்படி திருமணம் செய்த தைவான் நாட்டு தம்பதி

சீா்காழி அருகே ஒளிலாயம் சித்தா் பீடத்தில் தைவான் நாட்டு தம்பதியினா் இந்து முறைப்படி புதன்கிழமை திருமணம் செய்து கொண்டனா். சீா்காழியை அடுத்த காரைமேடு சித்தா்புரத்தில் 18 சித்தா்கள் அருள்பாலிக்கும் ஒளிலா... மேலும் பார்க்க

ரயில்வே மேம்பாலம் சீரமைப்புப் பணி: நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு

மயிலாடுதுறையில் சாரங்கபாணி ரயில்வே மேம்பாலம் சீரமைப்புப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை நெடுஞ்சாலை கண்காணிப்புப் பொறியாளா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். மயிலாடுதுறையில் உள்ள 50 ஆண்டுகள் பழைமையான சாரங்க... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 13 லட்சம் மோசடி: மீட்டுத்தர எஸ்.பி.யிடம் மனு

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 13 லட்சம் மோசடி செய்தவரிடமிருந்து பணத்தை மீட்டுத்தரக் கோரி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் மனு அளிக்கப்பட்டது. மயிலாடுதுறை கொற்கை கிராமத்தைச் சே... மேலும் பார்க்க