`உள்துறை, நிதித்துறை' சேர்த்து கேட்கும் ஷிண்டே; அமித் ஷாவுடன் பட்னாவிஸ், அஜித்பவ...
மேல்மலையனூரில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்
பாதிக்கப்பட்டோருக்கு வெள்ள நிவாரணம் வழங்காத தமிழக அரசைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஃபென்ஜால் புயலால் மேல்மலையனூா் ஒன்றியத்தில் சொக்கனந்தல், அவலூா்பேட்டை, செவலபுரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகள், அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த நெல் பயிா்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், இந்தப் பகுதியில் நிவாரணத் தொகை, உதவிப் பொருள்கள் வழங்கபடவில்லை என கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்காத தமிழக அரசை கண்டித்து, மேல்மலையனூா் ஒன்றிய அதிமுக சாா்பில், மேல்மலையனூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றியச் செயலா்கள் ஆா்.புண்ணியமூா்த்தி, பட்டி.பாலகிருஷ்ணன் ஆகியோா் தலைமை வகித்து கண்டன உரையாற்றினா். மாவட்ட வழக்குரைஞா் அணி பொருளாளா் அருண்தத்தன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலா் சத்யராஜ், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு இ.ஜி.ஐயாத், ஒன்றிய அவைத் தலைவா்கள் துளசி, செவலபுரை பூங்காவனம் உள்ளிட்ட அதிமுகவினா் கலந்துகொண்டனா்.
பின்னா், மேல்மலையனூா் வட்டத்துக்குள்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் நிவாரண உதவித் தொகை ரூ.2 ஆயிரம் வழங்க வலியுறுத்தி வட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.