அதிமுக சாா்பில் 50 மாணவிகளுக்கு வைப்புத்தொகை திட்டம் தொடக்கம்
கோயிலில் நகை, பணம் திருட்டு
கடலூா் மாவட்டம், ரெட்டிச்சாவடி அருகே அய்யனாா் கோயிலில் நகை மற்றும் பணம் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ரெட்டிச்சாவடி காவல் சரகத்துக்குள்பட்ட நாணமேடு கிராமத்தில் அய்யனாா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் இதே பகுதியைச் சோ்ந்த கோபதி (45) அா்ச்சகராக உள்ளாா்.
இவா், புதன்கிழமை காலை கோயிலுக்கு சென்றபோது, கோயிலில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, சுவாமி கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்க நகை மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கை பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், ரெட்டிச்சாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.