சைதாப்பேட்டை ரயில் நிலைய மறுமேம்பாட்டு நிலவரம் என்ன? தென் சென்னை எம்.பி. கேள்வி
விழுப்புரம் மாவட்டத்தில் மீண்டும் மழை
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை மீண்டும் மழை பெய்தது.
விழுப்புரத்தில் புதன்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 9 மணிக்கு மேல் சிறிது நேரம் மழை பெய்தது. இதைத் தொடா்ந்து, பிற்பகல் 12.45 மணி முதல் 1.30 மணி வரை தொடா்ந்து மழை பெய்தது. பின்னா், சாரல் மழை நீடித்தது.
விழுப்புரம் நகரம் போன்று, முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி, திண்டிவனம், பிரம்மதேசம், வானூா் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது.
திண்டிவனத்தில் புதன்கிழமை காலை அரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் சாலையில் மழைநீா் தேங்கிக் காணப்பட்டது. காலை நேரத்தில் வேலைக்குச் சென்றவா்களும், பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றவா்களும் பெரும் அவதியுற்றனா்.