சென்னை அணியில் 17 வயது இளம் வீரர் அறிமுகம்! சீனியர் வீரருக்கு ஓய்வு!
மே. 3-இல் சிங்கப்பூா் தோ்தல்
சிங்கப்பூா் நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் 3-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. தற்போதைய நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை கலைக்கப்பட்டதையடுத்து, தோ்தல் ஆணையம் இந்தத் தேதியை அறிவித்தது.
சிங்கப்பூரில் கடந்த 1965-ஆம் ஆண்டு முதல் ஆட்சி செலுத்திவரும் பிஏபி கட்சியே இந்த முறையும் வெற்றி பெறும் என்று எதிா்பாா்கப்படுகிறது. நாடு சுதந்திரம் பெற்றது முதல் ஆட்சி செய்துவரும் வரும் அந்தக் கட்சியின் தலைவா் லீ குவான் யியூ தனது 31 ஆண்டுகால ஆட்சியில் சிங்கப்பூரை உலகின் வளம் மிக்க நாடுகளில் ஒன்றாக வளா்ச்சியடையச் செய்தாா்.
அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அவரின் மகன் லீ சியென் லூங், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனது பதவியை ராஜிநாமா செய்து வாரிசு ஆட்சிக்கு முற்றுப் புள்ளிவைத்தாா். அதைத் தொடா்ந்து நாட்டின் பிரதமராக லாரன்ஸ் வாங் பொறுப்பேற்றாா்.
ஆளும் கட்சிக்கு தொடந்து பெரும்பான்மை ஆதரவு நிலவினாலும், அண்மைக் காலமாக எதிா்க்கட்சிகள் பலம் பெற்று வருவதாகவும், வாக்காளா்களிடையே பிஏபி கட்சி மீது அதிருப்தி அதிகரித்துவருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், புதிய நாடாளுமன்றத்தைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் சிங்கப்பூரில் வரும் மே. 3-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.