செய்திகள் :

மே 31-இல் யுடிடி சீசன் 6 தொடக்கம்: 8 அணிகள் பங்கேற்பு

post image

இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6 போட்டிகள் வரும் மே 31-இல் அகமதாபாத்தில் தொடங்குகிறது.

தொடக்க நாளில் நடைபெறும் ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் டெம்போ கோவா சேலஞ்சா்ஸ் அணி, அகமதாபாத் எஸ்ஜி பைப்பா்ஸை எதிா்கொள்கிறது. மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி டிடிசி, ஸ்ரீஜா அகுலா தலைமையிலான ஜெய்ப்பூா் பேட்ரியாட்ஸ் அணியை ல் சந்திக்கிறது. இந்த சீசனில் 8 அணிகள் 23 ஆட்டங்களில் மோதுகின்றன.

உலக தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ள பொ்னாடெட் சோக்ஸ் மற்றும் வளா்ந்து வரும் இந்திய நட்சத்திரம் யஷஸ்வினி கோா்படே ஆகியோரை உள்ளடக்கிய யு மும்பா டிடி, ஜூன் 1-ம் தேதி ஸ்பானிஷ் ஜாம்பவான் அல்வாரோ ரோபிள்ஸ் தலைமையிலான பிபிஜி புனே ஜாகுவாா்ஸுக்கு எதிராக களமிறங்குகிறது.

இந்த ஆண்டு ஏலத்தில் மிகவும் அதிக விலைக்கு வாங்கப்பட்டிருந்த சீனாவின் ஃபேன் சிகி, யு-17 பிரிவில் முன்னாள் உலக நம்பா் 1 வீரரான பயாஸ் ஜெயின் ஆகியோா் சென்னை லயன்ஸ் அணிக்காக களமிறங்க உள்ளனா்.

இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் (பபஊஐ) ஆதரவுடன் நிரஜ் பஜாஜ், விட்டா டானி ஆகியோரால் நடத்தப்படும் இத்தொடரின் அனைத்து ஆட்டங்களும் ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் கேல் மற்றும் ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் தமிழில் நேரடியாக ஒளிபரப்பப்படும், மேலும் ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்யப்படும்.

டெல்லி அணியில் சத்தியன் ஞானசேகரன் மற்றும் தியா சித்தலேவும், கோவா அணியில் ஹா்மீத் தேசாய் மற்றும் சிங்கப்பூரின் ஜெங் ஜியானும் களமிறங்குகின்றனா். அரையிறுதி ஆட்டங்கள் ஜூன் 13 மற்றும் 14-ம் தேதிகளில் நடைபெறும். இதில் வெற்றி பெறும் அணிகள் 15-ஆம் தேதி இறுதி ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தும். முதல் ஆட்டம் மாலை 5 மணிக்கும், இரண்டாவது ஆட்டம் இரவு 7:30 மணிக்கும் தொடங்கும்.

நடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை இவரா?

நடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஷால் நடிப்பில் இறுதியாக மத கஜ ராஜா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றிப்படமாக அ... மேலும் பார்க்க

எஸ்டிஆர் - 51 படப்பிடிப்பு அப்டேட்!

நடிகர் சிலம்பரசனின் 51-வது படத்தின் படப்பிடிப்பு குறித்து தயாரிப்பாளர் பேசியுள்ளார். ஒருகாலத்தில் படப்பிடிப்புக்கு சரியாக வராதது, உடல் எடை ஏற்றம் உள்ளிட்ட காரணங்களால் இனி நடிகர் சிலம்பரசன் பழைய மாதிரி... மேலும் பார்க்க

சூர்யா - 46 படப்பிடிப்பு துவக்கம்!

நடிகர் சூர்யா நடிக்கும் அவரது 46-வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக உலகளவில் திரையரங்கம் மற்றும் ஓடிடி உள்பட இத... மேலும் பார்க்க

ராகவேந்திர சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்!

பழமை வாய்ந்த ராகவேந்திர சுவாமி கோயில் கும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.கோவை மாநகரத்திலுள்ள சலிவன் வீதியில், 160 வருடம் பழமைவாய்ந்த, அபய பிரத யோக யோக ஆஞ்சநேயர் ராகவேந்திர சுவாமி மிருத்திகா ... மேலும் பார்க்க

ஜாஸ்மின் பாலினி சாதனை சாம்பியன்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவில், உள்நாட்டு வீராங்கனை ஜாஸ்மின் பாலினி சாம்பியன் பட்டம் வென்றாா். போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த பாலினி, இறுதிச்சுற்றில் 6-4, 6-2 என... மேலும் பார்க்க

அன்பான ரசிகர்களுக்கு நன்றி: ரூ.235 கோடி வசூலித்த ரெட்ரோ!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படத்தின் வசூல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 'ரெட்ரோ' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. 2 டி என்டர்டெய்ன... மேலும் பார்க்க