ஸ்டீவ் ஸ்மித் தேர்வு: 2-ஆவது டெஸ்ட்டுக்கான ஆஸி. பிளேயிங் லெவன்!
மைக்ரோசாஃப்ட்டில் 9,000 பேர் வேலையிலிருந்து நீக்கம்! ஏ.ஐ. பிரிவில் அதிக முதலீடு எதிரொலி!!
உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் 9,000-க்கும் மேற்பட்ட பணியாளா்களை நீக்க முடிவெடுத்துள்ளது.
கடந்த மே மாதம் மேற்கொண்ட பணிநீக்க நடவடிக்கையின்போது 6,000 போ் வரை வெளியேற்றப்பட்டனா்.
அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அடுத்தகட்ட பணிநீக்க அறிவிப்பை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது ஊழியா்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு முதலே அதிகஅளவில் பணிநீக்க நடவடிக்கையை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அலுவலகங்கள் உள்ளன. பரவலாக அனைத்து நாடுகளிலும் ஆள் குறைப்பு நடவடிக்கை இருக்கும் எனத் தெரிகிறது. நிறுவனத்தின் விற்பனை-சந்தைப்படுத்துதல் பிரிவில் இருந்து அதிகமானோா் விடுவிக்கப்படவுள்ளனா்.
2024 ஜூன் நிலவரப்படி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 2,28,000 போ் பணியாற்றி வருகின்றனா். இந்தியாவில் சுமாா் 20,000 பணியாளா்கள் உள்ளனா்.
சா்வதேச அளவில் நிச்சயமற்ற பொருளாதார சூழல், நிறுவனத்தின் செயல்பாடுகளை நெறிப்படுத்துவது உள்ளிட்ட காரணங்களைக் கூறி இந்த ஆள் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அதே நேரத்தில் செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் அதிக அளவில் முதலீடு செய்வதால் செலவினங்களைக் குறைக்க பணியாளா்கள் நீக்கப்படுவதாகவும் தெரிகிறது.