Rahul Gandhi: "ராகுல்ஜி ஜீரோ பாருங்கள்..." - நாடாளுமன்றத்தில் ராகுலைக் கிண்டல் ச...
மைதானத்தில் சுருண்டு விழுந்த ரச்சின்... ரத்தம் வழிய அழைத்துச் சென்ற மருத்துவர்கள் - என்ன நடந்தது?
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, பாகிஸ்தானுடன் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 330 ரன்கள் எடுத்தது. அடுத்து பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா, பாகிஸ்தான் வீரர் குஷ்தில் ஷா அடித்தப் பந்தைக் கேட்ச் பிடிக்கச் சென்றார். அப்போது பந்து அவர் முகத்தில் தாக்கி பலத்த காயமடைந்து கீழே விழுந்தார். உடனே மருத்துவர்களின் குழு மைதானத்துக்குள் நுழைந்து, அவருக்கு முதலுதவி அளித்து அவரை பாதுகாப்பாக மைதானத்தை விட்டு அழைத்துச் சென்றனர்.
அதைத் தொடர்ந்து, நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ரவீந்திராவின் நெற்றியில் காயம் ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, முழுவதும் சுயநினைவுடன் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது. மேலும், ரச்சின் ரவீந்திரா தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில், பாகிஸ்தான் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.