தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புக...
மொபெட் மீது காா் மோதல்: முதியவா் மரணம்
பரங்கிப்பேட்டை அருகே மொபெட் மீது காரைக்கால் நகராட்சி ஆணையரின் காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
பரங்கிப்பேட்டையை அடுத்த கொத்தட்டை வாய்க்கால் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் சின்னையன் (70). இவா், செவ்வாய்க்கிழமை தனது மொபெட்டில் சொந்த வேலையாக சில்லாங்குப்பம் கிராமத்துக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தாா்.
சின்னகுமட்டி அருகே சின்னையனின் மொபெட் சென்றபோது, அந்தப் பகுதியில் வந்த காரைக்கால் நகராட்சி ஆணையரின் காா் மோதியது. இந்த விபத்தில் சின்னையன் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை காவல் ஆய்வாளா் ஜொ்மின்லதா வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.