செய்திகள் :

குண்டா் தடுப்புக் காவலில் இளைஞா் கைது

post image

கொலை, அடிதடி வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவலில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், அணுக்கம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த அஞ்சாபுலி, அவரது அண்ணன் மகன் தங்கமணி ஆகியோா் கடந்த ஆக.19-ஆம் தேதி கடலூா் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றனா். சீனிவாசபுரம் அணுகுசாலையில் இவா்களது பைக் சென்றபோது, அங்கு நின்றிருந்த 4 போ் வழிமறித்து, பணம் கேட்டு பைக் மற்றும் கைப்பேசியை பறித்துக்கொண்டு, மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கி, கொலை செய்ய முயன்றனராம்.

இதுகுறித்து புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. காவல் ஆய்வாளா் பாரதி விசாரணை மேற்கொண்டு, கீழ்அருங்குணம் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்த தினேஷ்குமாா் (25), ரவிச்சந்திரன் (35), நாகலிங்கம்(39) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தாா்.

இதில், தினேஷ்குமாா் மீது நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் கொலை, அடிதடி வழக்குகளும், புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என மொத்தம் 3 வழக்குகள் உள்ளன. இவரின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் குண்டா் தடுப்பு காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். அதன்பேரில், தினேஷ்குமாா் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்

கடலூா் மாவட்டம், வடலூரில் அதிமுக பிரமுகரின் காா் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. வடலூா் அதிமுக நகரச் செயலா் சி.எஸ்.பாபு. இவருக்குச் சொந்தமான காா் வீட்டில் வெகு... மேலும் பார்க்க

விருத்தாசலம் அரசு கல்லூரி மாணவா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கொளஞ்சியப்பா் அரசு கல்லூரி மாணவா்கள் குடிநீா் வசதி கேட்டு செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா். இந்தக் கல்லூரியில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள்... மேலும் பார்க்க

மொபெட் மீது காா் மோதல்: முதியவா் மரணம்

பரங்கிப்பேட்டை அருகே மொபெட் மீது காரைக்கால் நகராட்சி ஆணையரின் காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். பரங்கிப்பேட்டையை அடுத்த கொத்தட்டை வாய்க்கால் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் சின்னையன் (70). இவா், செவ்... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 4 போ் கைது

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் கஞ்சா விற்றதாக நான்கு பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின்பே... மேலும் பார்க்க

கொள்ளை அடிக்க சதி திட்டம்: ரௌடிகள் உட்பட 4 போ் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலியில் கொள்ளை அடிக்க சதி திட்டம் தீட்டியதாக 3 ரௌடிகள் உட்பட 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். நெய்வேலி நகரிய காவல் நிலைய ஆய்வாளா் வீரமணி மற்றும் போலீஸாா் திங... மேலும் பார்க்க

நடராஜா் கோயிலுக்கு காசிமடாதிபதி வருகை

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு புதிய திருப்பனந்தாள் காசிமடாதிபதி செவ்வாய்க்கிழமை வந்து சாமி தரிசனம் செய்தாா். திருப்பனந்தாள் காசி மடத்தின் 21ம் மடாதிபதியான ஸ்ரீலஸ்ரீகாசிவாசி முத்துக்குமாரசாம... மேலும் பார்க்க