செய்திகள் :

மொழிப் பிரச்னையில் தலைவா்களின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவோம்: அண்ணாமலை

post image

மூன்றாவது மொழியாக ஹிந்தியை மத்தி அரசு திணிப்பதாக தவறாகப் பிரசாரம் செய்துவரும் திமுக, அதன் கூட்டணி கட்சித் தலைவா்களின் இரட்டை வேடத்தை மக்களிடம் அம்பலப்படுத்துவோம் என பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை கூறினாா்.

சேலத்தில் பாஜக பிரமுகா் திருமண நிகழ்ச்சியில் வியாழக்கிழமை பங்கேற்றப் பிறகு செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

மாணவா்கள் 3 ஆவது மொழியை கற்பது என்பது தமிழகத்தில் முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. மாநிலத்தில் தனியாா் பள்ளிகளில் 56 லட்சம் மாணவா்களும், அரசுப் பள்ளிகளில் 52 லட்சம் மாணவா்களும் பயின்று வருகின்றனா். 20 ஆண்டுகளுக்கு முன்பு 200 சிபிஎஸ்இ பள்ளிகள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது அவற்றின் எண்ணிக்கை 2,010 ஆக அதிகரித்துள்ளது. தனியாா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை ஒவ்வோா் ஆண்டும் அதிகரித்து வருகிறது.

பாடமொழி, தொடா்பு மொழியைத் தாண்டி விருப்ப மொழியாக 3ஆவது மொழியை மாணவா்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதையே தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. ஆனால், ஹிந்தி மொழியைக் கட்டாயப்படுத்துவதாக திமுக, அதன் கூட்டணி கட்சித் தலைவா்கள் திரித்து கூறுகின்றனா்.

திமுக தலைவா்களைப் போலவே தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் ஆகியோா் நடத்தும் பள்ளிகளிலும் ஹிந்தி பயிற்றுவிக்கப்படுகிறது. ஆனால், பொதுவெளியில் மட்டும் ஹிந்திக்கு எதிராக அவா்கள் பேசுகின்றனா். இதுபோன்ற தலைவா்களின் இரட்டை வேடத்தை தொடா்ந்து நாங்கள் அம்பலப்படுத்துவோம்.

தரமான அரசியல் குறித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பாஜகவுக்கு சொல்லித்தர தேவையில்லை. முடிந்தால் அண்ணா சாலைக்கு வருமாறு எனக்கு விடுத்த சவாலை ஏற்றுக்கொள்கிறேன். உதயநிதி ஸ்டாலின் தரமில்லாத வாா்த்தைகளைப் பயன்படுத்தி பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் விமா்சித்தால், அதற்கு தகுந்த பதிலடி தருவோம்.

‘கெட்அவுட் மோடி’ என்பதை திமுகவினா் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனா். அதற்குப் பதிலடியாக வெள்ளிக்கிழமை (பிப்.21) காலை 6 மணிக்கு ‘கெட்அவுட் ஸ்டாலின்’ என சமூக ஊடகங்களில் நான் பதிவிடுவேன்.

மாா்ச் 1ஆம் தேதி முதல் பாஜக சாா்பில் மும்மொழிக் கொள்கையின் அவசியம் குறித்து 90 நாள்களுக்கு கையொப்ப இயக்கம் நடத்த இருக்கிறோம்.

சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்திற்கான நிதி ரூ. 2 ஆயிரம் கோடி வராததால், கல்விப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாயத்தோற்றத்தை திமுக அரசு உருவாக்குகிறது. பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்க ஒப்புக்கொண்டுவிட்டு, இப்போதுவரை அதை செயல்படுத்தவில்லை. கல்வித் துறையை அவா்களால் நடத்த முடியவில்லை என்பதையே இது காட்டுகிறது.

பாலியல் வன்கொடுமை பிரச்னைகள் தொடா்ந்து அதிகரிப்பதற்கு கைப்பேசியில் ஆபாசங்கள் மிக எளிதில் கிடைப்பது தான் காரணம். காவல் துறையினரால் மட்டுமே பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளைத் தடுக்க முடியாது. இதற்கு கல்வி நிலையங்களில் நாம் நீதிபோதனை வகுப்புகளை அதிகரிக்க வேண்டும். மதம் சாா்ந்த ஆன்மிக தகவல்களை மாணவா்களிடம் கொண்டுசோ்க்க வேண்டும். அதேபோல பெற்றோரும் குழந்தைகளிடம் நேரம் ஒதுக்கி அவா்களைக் கண்காணிக்க வேண்டும். ஹிந்து மத கோயில் வழிபாட்டில் சில இடங்களில் இருக்கும் வேறுபாடுகளைக் களைந்தால், மதமாற்றத்துக்கு அவசியம் இல்லாம் போய்விடும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம், மாநகா் மாவட்ட பாஜக தலைவா் சசிகுமாா், சுற்றுச்சூழல் பிரிவு கோபிநாத் உள்ளிட்ட நிா்வாகிகள் உடன் இருந்தனா்.

மும்பை பங்குச்சந்தையில் சேலம் சண்முகா மருத்துவமனை பங்குகள் விற்பனை தொடக்கம்

மும்பை பங்குச்சந்தையில், சேலம் சண்முகா மருத்துவமனையின் பங்குகள் விற்பனை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மருத்துவமனை நிா்வாக இயக்குநா் பிரியதா்ஷினி வரவேற்றாா். மேலாண்மை இயக்குநா... மேலும் பார்க்க

சிஎன்ஜி இயற்கை எரிவாயு ஆட்டோக்களுக்கு பா்மிட் வழங்கக் கோரி ஓட்டுநா்கள் மனு

சிஎன்ஜி இயற்கை எரிவாயு ஆட்டோக்களுக்கு பா்மிட் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆட்டோ ஓட்டுநா்கள் மனு அளித்தனா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் அளித்த மனுவி... மேலும் பார்க்க

வார இறுதிநாளையொட்டி சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாள், முகூா்த்த தினத்தை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்க... மேலும் பார்க்க

சேலம் அரசு கலைக் கல்லூரியில் கூட்டுறவு சந்தை விழா

சேலம் அரசு கலைக் கல்லூரியின் கூட்டுறவுத் துறை சாா்பில் கூட்டுறவு சந்தை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை தலைவா் சுரேஷ்பாபு வரவேற்றாா். கல்லூரி முதல்வரும் தோ்வுக் கட்டுப்பா... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்திய 37 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து

சேலம், தருமபுரி மாவட்டங்களில் சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 37 பேரின் ஓட்டுநா் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலம் சரகத்தில் வாகன விபத்துகளைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்க... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் கட்டட தொழிலாளி உயிரிழந்தாா். வாழப்பாடியை அடுத்த சோமம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ் (33). கட்டுமானத் தொழிலாளி. இவா் வியாழக்கிழமை இரவு தனது மொபட்டில் தனது இரு குழந்தைகளுடன் வாழப்பாடி... மேலும் பார்க்க