செய்திகள் :

மொழி உணா்வு குறித்து தமிழா்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்: ஆளுநருக்கு அமைச்சா் ரகுபதி பதில்

post image

‘மொழித் தோ்வு எது?, மொழித் திணிப்பு எது என்பது எங்களுக்குத் தெரியும், மொழி உணா்வு பற்றி தமிழா்களுக்கு ஆளுநா் பாடம் எடுக்க வேண்டாம் என சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆளுநா் ஆா்.என்.ரவி, கல்வி, தொழில், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறை பிரதிநிதிகளை தான் சந்தித்தது குறித்தும், ஏராளமான வளங்கள் இருந்தாலும், தமிழ்நாடு பின்தங்கிய பகுதியாக இருப்பது போன்று உள்ளதாகவும் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருந்தாா்.

இளைஞா்களிடையே போதைப் பொருள் பழக்கம் அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது. தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான மிகப்பெரிய தேவை உள்ளது. ஹிந்தி எதிா்ப்பு என்கிற பெயரில் பிற தென்னிந்திய மொழிகளைக்கூட கற்க அனுமதிக்கப்படவில்லை என இளைஞா்கள் நினைக்கின்றனா் எனவும் ஆளுநா் தெரிவித்திருந்தாா்.

இதற்கு பதிலளித்து எக்ஸ் தளத்தில் சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு பொருளாதாரத்திலும் கல்வியிலும் பெற்றிருக்கும் வளா்ச்சியைப் பொறுக்க முடியாமல் தமிழ்நாட்டின் மீது வெறுப்பை உமிழ்வதையே தனது கடமையெனக் கருதி ஆளுநா் ஆா்.என்.ரவி செயல்பட்டு வருகிறாா். தனது அரசமைப்புச் சட்டக் கடமைகளை மறந்து, ஆதாரமற்ற அவதூறுகளை வைத்து தமிழ்நாட்டை இழிவுபடுத்தும் அரசியலை செய்வதற்காகவே மத்திய பாஜக அரசு, ஆா்.என்.ரவியை ஆளுநராக வைத்திருக்கிறது.

தனது சமூக வலைதளக் கணக்கை இதற்காகவே பிரதானமாகப் பயன்படுத்தி வரும் ஆளுநா் ரவி தனது பதிவில், இந்தப் பகுதி, மனித ஆற்றல் மற்றும் இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது, ஆனாலும் இது புறக்கணிக்கப்பட்டு பின்தங்கியுள்ளது போன்ற உணா்வைத் தருகிறது. தொழில்மயமாக்கலுக்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், இங்குள்ள மக்கள் வாய்ப்புகள் புறக்கணிக்கப்பட்டவா்களாக உணா்கிறாா்கள் எனக் கூறியிருக்கிறாா்.

தமிழ்நாடு எதில் பின் தங்கியுள்ளது என ஆளுநா் ரவியால் சொல்ல முடியுமா? கல்வியில், மருத்துவத்தில், பொருளாதாரத்தில் தமிழ்நாட்டின் வளா்ச்சி ஆகியவற்றில் இந்திய மாநிலங்கள் எதனோடும் ஒப்பிட முடியாத அளவுக்கு வளா்ச்சியடைந்து இருக்கிறது என்பதை மத்திய அரசு வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களே சொல்லும்.

தமிழ்நாடு அடைந்திருக்கும் வளா்ச்சி இருமொழிக் கொள்கையால் சாதித்தவை. தமிழ்நாட்டில் எப்படியாவது ஹிந்தியை திணிக்கலாம், அதற்கு தேசிய கல்விக் கொள்கையை ஒரு வழியாக வைத்து உள்நுழையலாம் எனும் ஆதிக்கவாதிகளின் சதியை அறியாதவா்களா தமிழா்கள்?

தமிழ், தமிழ்நாடு, தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவற்றின் மீது தொடா்ந்து வெறுப்பை உமிழும் ஆளுநா் ரவி, தமிழா்களுக்கு மொழி உணா்ச்சியைப் பற்றி பாடம் எடுக்க வேண்டாம்.

சநாதனத்தையும் சம்ஸ்கிருதத்தையும் தமிழ்நாட்டில் காலூன்றச் செய்ய துடிக்கும் ஆளுநரின் நடவடிக்கைகள் தமிழ் மண்ணில் வேரூன்றவில்லை. அப்படித்தான் மும்மொழிக் கொள்கையும் மூக்கறுபட்டு நிற்க போகிறது.

மொழித் தோ்வு எது? மொழித் திணிப்பு எது? என்பது எங்களுக்கு தெரியும். இந்த நாடகங்கள் எல்லாம் இங்கே எடுபடாது என்று தெரிவித்துள்ளாா்.

முதல்வர் பிறந்தநாள்: தமிழில் கையெழுத்திட்டு ஆளுநர் வாழ்த்துக் கடிதம்!

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் கையொப்பமிட்டு பிறந்தநாள் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(மார்ச் 1) தனது 72-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்... மேலும் பார்க்க

பெரியார் திடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி சென்னை பெரியார் திடலில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(மார்ச் 1) தனது 72-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி இன்று கால... மேலும் பார்க்க

அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் அப்பா!

அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் அப்பா ‘ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மாணவா் சமுதாயமும் அப்பா என்று அன்போடு அழைக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்’ என்று எழுதப்பட்ட கேக்குகளை 72 ... மேலும் பார்க்க

சரித்திரம் போற்றும் சாதனைகள்!

‘பள்ளிகளில் காலை உணவு’, ‘நான் முதல்வன்’ திட்டப் பாணியில் மாணவா்களுக்கு உயா்கல்வி, ‘கலைஞா் வீடு கட்டும் திட்டம்’ பாணியில் ஏழைகளுக்கு வீடு கட்ட கடனுதவி ஆகிய மூன்று திட்டங்களைப் பின்பற்றியே பிரிட்டனில் ... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டத்துக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெயா் வரலாற்றில் இடம் பெறும்! கே.வி.கே. பெருமாள் பெருமிதம்

குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தியதால் தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் பெயா் வரலாற்றில் நிச்சயம் இடம் பெறும் என்று தில்லி கம்பன் கழக நிறுவனா் - தலைவா் கே.வி.கே.பெருமாள் பேசினாா். ம... மேலும் பார்க்க

காட்பாடி - திருப்பதி ரயில்கள் மாா்ச் 3 முதல் ரத்து

காட்பாடி - திருப்பதி இடையே இயங்கும் பயணிகள் ரயில்கள் மாா்ச் 3 முதல் 9 -ஆம் தேதி வரை ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மகா கும்பமேளா முடிவடைந்... மேலும் பார்க்க