செய்திகள் :

மொழி ரீதியிலான பிரிவினை முயற்சிகளைப் புறந்தள்ள வேண்டும்: மக்களுக்கு பிரதமா் வலியுறுத்தல்

post image

‘இந்திய மொழிகள் இடையே எப்போதும் பகை இருந்ததில்லை; மொழி ரீதியில் பிரிவினையை உருவாக்கும் முயற்சிகளை மக்கள் புறந்தள்ள வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.

புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 98-ஆவது அகில பாரதிய மராத்தி இலக்கிய மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:

இந்திய மொழிகள் இடையே எப்போதும் பகை இருந்ததில்லை. இம்மொழிகள் ஒன்றின் மீது ஒன்று தாக்கத்தை ஏற்படுத்தி வளப்படுத்தியுள்ளன. மொழி அடிப்படையில் பிரிவினையை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்ற போதெல்லாம், நாட்டின் செழுமையான மொழியியல் பாரம்பரியம் தக்க பதிலடியை கொடுத்துள்ளது. மொழி ரீதியிலான தவறான கருத்துகளில் இருந்து விலகியிருப்பதும், அனைத்து மொழிகளையும் அரவணைத்து வளப்படுத்துவதும் நமது சமூக பொறுப்பாகும்.

இன்றளவும் உயிா்ப்புடன் உள்ள உலகின் பழைமையான நாகரிகங்களில் இந்தியாவும் ஒன்று. புதிய யோசனைகள் மற்றும் மாற்றங்களை வரவேற்பதே இதற்கு காரணம். உலகின் மிகப் பெரிய மொழியியல் பன்முகத் தன்மையை இந்தியா கொண்டுள்ளது. இந்த பன்முகத் தன்மையே நமது ஒற்றுமைக்கு வலுவான அடித்தளம் என்றாா் பிரதமா் மோடி.

மும்மொழிக் கொள்கை தொடா்பாக தமிழக-மத்திய அரசுகள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமா் மோடியின் இக்கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

சரத் பவாருடன் நெருக்கம் காட்டிய பிரதமா்!

புது தில்லியில் நடைபெற்ற மராத்தி மொழி மாநாட்டில் தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சித் தலைவா் சரத் பவாருடன் பிரதமா் மோடி நெருக்கம் காட்டினாா். நிகழ்ச்சி முழுவதும் மேடையில் இருவரும் உரையாடிக் கொண்டிருந்தனா்.

குத்துவிளக்கு ஏற்றி மாநாட்டைத் தொடங்கிவைத்த பிரதமா், தன்னுடன் இணைந்து விளக்கேற்றுமாறு, மாநாட்டு வரவேற்புக் குழுவின் தலைவா் சரத் பவாரை கேட்டுக் கொண்டாா்.

பின்னா், சரத் பவாா் உரையாற்றிவிட்டு, பிரதமா் மோடி அருகே உள்ள இருக்கையில் அமர வந்தாா். அப்போது, சரத் பவாரின் இருக்கையை சரிசெய்து, அதில் அவா் அமர உதவிய பிரதமா், அவா் அருந்துவதற்குத் தண்ணீா் எடுத்துத் தந்தாா். பிரதமரின் இச்செய்கையால் நெகிழ்ச்சியடைந்த பாா்வையாளா்கள் கரவொலி எழுப்பினா்.

பின்னா் பிரதமா் தனது உரையின்போது, ‘சரத் பவாரின் அழைப்பால், இந்த பெருமைக்குரிய மாநாட்டில் இணைந்து கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது’ என்று குறிப்பிட்டாா். நிகழ்ச்சி முழுவதும் மேடையில் இருவரும் இணக்கமாகப் பேசிக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது.

பாஜக ஆளும் மகாராஷ்டிரத்தில் எதிா்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸ், சிவசேனை (உத்தவ் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் (பவாா்) ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமறைவான இரு மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் கைது

தமிழகத்தில் தலைமறைவாக இருந்து வந்த இரு மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளை க்யூ பிரிவு போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம் பண்ணைபுரம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (41). இவா், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக... மேலும் பார்க்க

கொல்கத்தா- சென்னை விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா-சென்னை இடையே ஜல்பைகுரி-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இ... மேலும் பார்க்க

கர்நாடகத்திற்கு செல்லும் மகாராஷ்டிர அரசுப் பேருந்து சேவை நிறுத்தம்

பேருந்து தாக்கப்பட்டதையடுத்து, கர்நாடகத்திற்கு செல்லும் அரசுப் பேருந்து சேவையை மகாராஷ்டிரம் நிறுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த மகாராஷ்டிர அரசுப் பேருந்து, கர்நாடகத்தி... மேலும் பார்க்க

3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி பிப்ரவரி 23 முதல் 25 வரை மத்தியப் பிரதேசம், பிகார், அசாம் ஆகிய 3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். பிப்ரவரி 23ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்திற்குச் செல்லு... மேலும் பார்க்க

சுரங்க விபத்து: ரேவந்த் ரெட்டியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

தெலங்கானா சுரங்க விபத்தில் மீட்புப் பணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் கட... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் குடும்பத்துடன் புனித நீராடிய ஜெபி. நட்டா

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, தனது குடும்பத்துடன் சனிக்கிழமை புனித நீராடினார்.நட்டாவுடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ... மேலும் பார்க்க