மோகன்லாலின் பரோஸ் வணிக தோல்வி!
நடிகர் மோகன்லாலின் பரோஸ் திரைப்படம் வணிக ரீதியாக பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் மோகன்லால் இயக்கத்தின் முதல் படமான பரோஸ் கடந்த புதன்கிழமை கிறிஸ்துமஸ் வெளியீடாகத் திரைக்கு வந்தது. குழந்தைகளுக்கான திரைப்படமாக உருவான இதில் புதையலைக் காக்கும் பரோஸ் என்கிற கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்திருந்தார்.
இப்படம் ரூ. 80 கோடி செலவில் உருவானதாகக் கூறப்பட்ட நிலையில், திரையரங்க வெளியீட்டில் இதுவரை ரூ. 10 கோடி கூட வசூலிக்காமல் திணறி வருகிறதாம். இதனால், இப்படம் வணிக ரீதியாகத் தோல்வியைச் சந்திக்கும் என்றே தெரிகிறது.
இதையும் படிக்க: சினிமாவிலிருந்து விலகும் கீர்த்தி சுரேஷ்?
இப்படத்தில் மீரா ஜாஸ்மின், குருசோமசுந்தரம் மற்றும் ஸ்பானிஷ் நட்சத்திரங்கள் பாஸ் வேகா, ரஃபேல் அமர்கோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஆசிர்வாத் சினிமாஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிடியன் நாதஸ்வரம் இசையமைத்துள்ளார்.