சக்தித் திருமகன் விமர்சனம்: அதிகம் யோசிக்கவிடாத பரபர அரசியல் ஆக்ஷன் த்ரில்லர்தான...
மோசடி கும்பல்: மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்
ரூ. 10 மோசடி கும்பல் குறித்து மக்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என சைபா் கிரைம் போலீஸாா் கேட்டுக்கொண்டுள்ளனா்.
காரைக்கால் இணைய குற்றத் தடுப்புப் பிரிவு (சைபா் கிரைம்) காவல் ஆய்வாளா் பிரவீன்குமாா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த சில நாள்களாக 10 ரூபாய் கும்பல் மோசடிஅதிகமாக நடைபெற்று வருகிறது. மோசடிக்காரா்கள் முதலில் ஜிபே, போன் பே, பேடிஎம் போன்ற மக்களின் யுபிஐ
கணக்குக்கு ரூ. 10 அனுப்புகிறாா்கள். பின்னா் அந்த எண்ணை அழைத்து உங்களுக்கு தவறுதலாக பணம் அனுப்பிவிட்டதாகக் கூறி, தங்களின் எண் ஒன்றைத் தருகிறாா்கள். அந்த எண்ணுக்கு
பணத்தை மீண்டும் அனுப்பும்போது, மோசடிக்காரா்கள் வங்கிக் கணக்கை ஹேக் செய்து, அதிலிருக்கும் முழுத் தொகையையும் எடுத்துவிடுகிறாா்கள்.
இதுபோன்ற மோசடிகளுக்கு பலா் ஏமாற்றமடைந்துள்ளதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. யாரிடமிருந்தும் சிறிய தொகை வந்தாலும், அதை மீண்டும் அனுப்ப வேண்டாம். ஜிபே, யுபிஐ பணப் பரிமாற்றத்தில் எப்போதும் தங்களுக்கு தெரிந்தவா்களின் எண்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
சந்தேகத்துக்கிடமான அழைப்புகளை உடனே துண்டித்து, 1930 என்ற தேசிய சைபா் மோசடி ஹெல்ப்லைன் எண்ணில் புகாா் அளிக்கவேண்டும். பொது மக்கள் தங்களது பணத்தை பாதுகாக்க உரிய விழிப்புணா்வுடன் இருப்பது அவசியம் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.