செய்திகள் :

மோசடி வழக்கு: ``10-ம் தேதிக்குள் கைது செய்ய வேண்டும்" -நடிகர் சோனு சூட்க்கு எதிராக கைது வாரண்ட்!

post image

பஞ்சாப் மாநிலம் லுதியானாவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜேஷ் கண்ணா. இவர் லுதியானா நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ``மோஹித் சுலா என்பர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யும்படி தொடர்ந்து வலியுறுத்திவந்தார். அதன் அடிப்படையில், ரூ.10 லட்சம் முதலீடு செய்யப்பட்டது. அதன்பிறகுதான் அது போலி கிரிப்டோ கரன்சி என்பது தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய நடிகர் சோனு சூட் உள்ளிட்டவர்களிடம் விசாரிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதன் அடிப்படையில், விசாரணைக்கு ஆஜராகும்படி நீதிமன்றம் நடிகர் சோனுசூட்டுக்கு பலமுறை சம்மன் அனுப்பியிருக்கிறது.

சோனு சூட்

ஆனால், அது எதற்கும் அவர் பதிலளிக்கவில்லை எனத் தெரிகிறது. நீதிமன்றத்தில் ஆஜராகும்படியும் சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. அதற்கும் அவர் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை.

இந்த நிலையில், நீதிபதி ராமன்பிரீத் கவுர், ``இத்தனைமுறை சம்மன் அனுப்பியும் நீதிமன்றத்தில் ஆஜராகாத சோனுசூட் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும். 10-ம் தேதிக்குள் அவர் கைது செய்யப்பட வேண்டும். அப்படி கைது செய்யப்படவில்லையென்றால், நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும்படியான காரணத்தை காவல்துறை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும்" என மும்பையின் ஓஷிவாரா காவல் நிலையத்துக்கு கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டிருக்கிறார்.

`எனக்கு லீவு வேணும்..' -தர மறுத்ததால் சக ஊழியர்களைக் கத்தியால் குத்திய அரசு ஊழியர்

மேற்கு வங்கம் மாநிலத்தில், விடுப்பு அளிக்க மறுத்ததால் சக ஊழியர்கள் 4 பேரை அரசு ஊழியர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோ... மேலும் பார்க்க

'அடுத்து எனக்கு தான் ஸ்கெட்ச்' - வீடியோ காலில் கோவை சிறை கைதி பகீர் வாக்குமூலம்

கோவை மத்திய சிறையில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் இருக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஏசுதாஸ் என்ற கைதி கடந்த ஜனவரி 27-ம் தேதி சிறை வளாகத்தில் மர்மமான முறைய... மேலும் பார்க்க

``வயித்துல குழந்தை இருக்கு, விட்டுடு தம்பினு கெஞ்சினேன்’’ - நெஞ்சை உறைய செய்த கர்ப்பிணி வாக்குமூலம்

வேலூர் அருகே வந்துகொண்டிருந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் 36 வயது கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, அவரை ஓடும் ரயிலில் இருந்தும் கீழே தள்ளிய சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிறத... மேலும் பார்க்க

``தையல் போட்டால் தழும்பு வரும்'' -காயத்தில் Fevi kwik போட்டு ஒட்டிய செவிலியர்... கர்நாடக அதிர்ச்சி!

கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் அமைந்துள்ளது ஆரம்ப சுகாதார மையம். இந்த மருத்துவமனைக்கு கடந்த ஜனவரி 14-ம் தேதி கன்னத்தில் ஆழமான காயத்துடன் ரத்தம் சொட்ட சொட்ட குருகிஷன் அன்னப்ப ஹோசாமணி என்ற 7 வயது சி... மேலும் பார்க்க

மணப்பாறை: சிறுமிக்குப் பாலியல் தொல்லை; பள்ளி தாளாளர், கணவர் உள்பட 4 பேர் கைது; என்ன நடந்தது?

திருச்சி மாவட்டம், மணப்பாறையிலுள்ள தனியார்ப் பள்ளியின் தாளாளராக இருந்து வருபவர் சுதா. இவரது கணவர் வசந்தகுமார்.நேற்று (பிப்ரவரி 6) பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியின் போது நான்காம் வகுப்பு படித்து வரு... மேலும் பார்க்க

`காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம்..!’ - வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்த காதலன்

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகிலுள்ள கரடிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரின் மூத்த மகன் வசந்த். ஐடிஐ படித்து வந்த நிலையில், கல்வியை பாதியில் நிறுத்தி விட்டு கோயம்புத்தூரில் உள்ள ஒரு ஹோட்டலி... மேலும் பார்க்க